மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

டாஸ்மாக்: குறையும் பார் வருமானம்!

டாஸ்மாக்: குறையும் பார் வருமானம்!

தமிழக டாஸ்மாக் பார் வருமானம் வெகுவாக குறைந்துள்ளதால் அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டு வருவதாக அதிகாரிகள் மத்தியில் பேச்சாக இருக்கிறது.

“தமிழக அரசு நிதி நெருக்கடியில் தள்ளாடிவருகிறது, மணல் குவாரியில் எதிர்பார்த்த அளவில் அரசுக்கு வருமானம் வரவில்லை, ஜி.எஸ்.டி. அமல்படுத்தியதால் மாநில அரசுக்கு வருவாயும் கணிசமாகக் குறைந்துவிட்டது.

டாஸ்மாக் விற்பனை வழியாகவும், டாஸ்மாக் கடையை சார்ந்த பார்கள் மூலமாகவும்தான் கணிசமான வருமானம் வந்தது. இந்நிலையில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகள் இருக்கக்கூடாது, 500 மீட்டர் தூரம் தள்ளித்தான் டாஸ்மாக் கடைக்கு அனுமதி வழங்கவேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவால் அதுவும் குறைந்துவிட்டது. 2700 டாஸ்மாக் பார் மூலம் ஆண்டுக்கு ரூ 400 கோடி வருமானம் வந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவால் சாலை ஓரங்களிலிருந்த பல கடைகளை மூடியதால், தற்போது வெறும் 500 பார்களுக்கு மட்டுமே டெண்டர் படிவம் பெறப்பட்டுள்ளது.

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

புதன் 3 ஜன 2018