மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல்!

மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல்!

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் மசோதா இன்று (ஜனவரி 3) மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

முஸ்லிம்களிடையே நடைமுறையில் உள்ள உடனடி முத்தலாக் முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, கடந்த வாரம் பாராளுமன்ற மக்களவையில் முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது.

இன்று (ஜனவரி 3) பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் மசோதாவைத் தாக்கல் செய்தார். பின்னர் அவர் கூறுகையில், “முத்தலாக் மசோதா முக்கியமானது. இதனை விவாதத்திற்கு எடுக்க வேண்டும். மக்களவையில் மசோதா நிறைவேற்றிய பின்பு வரதட்சணை கொடுக்கவில்லை எனக் கூறி மொரதாபாத்தில் தலாக் கூறி விவாகரத்து நடைபெற்றுள்ளது” என்று சுட்டிக் காட்டினார்.

இந்த மசோதாவைத் தாக்கல் செய்த பிறகு காங்கிரஸ் எம்பி ஆனந்த் சர்மா, “திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் இந்த மசோதாவைத் தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று கோரினார். இந்தக் குழுவில், ரேணுகா சௌத்ரி ஜாவேத் அஹமட், கே.கே.ரகேஷ், டி. ராஜா ஆகியோர் உட்பட 17 ராஜ்யசபா எம்பி.க்களின் பெயர்களைப் பரிந்துரைத்துள்ளார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி, “மக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யும்போது ஆதரித்துவிட்டுத் தற்போது எதிர்ப்புத் தெரிவிப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்த மசோதாவை பிப்ரவரி 22ஆம் தேதிக்குள் சட்டமாக இயற்ற வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விவாதத்தைத் தொடர்ந்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாளைக் காலை 11 மணி வரை அவையை ஒத்திவைப்பதாக ராஜ்யசபா துணைத் தலைவர் குரியன் அறிவித்துள்ளார்.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

புதன் 3 ஜன 2018