ஆளுநருக்குப் புதிய பாதுகாப்பு அதிகாரி!

தமிழகக் காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரிகள் மூன்று பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவைத் தமிழக கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.
இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளின் விவரம்:
கன்னியாகுமரி காவல் கண்காணிப்பாளராக இருந்துவரும் எம்.துரை ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.
ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி பொறுப்பில் இருந்த பிரவீன் குமார் அபிநபு சென்னை சிபிசிஐடியில் கண்காணிப்பாளராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்
சென்னை சிபிசிஐடி கண்காணிப்பாளரான என்.ஸ்ரீநாதா கன்னியாகுமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.