மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

பியூட்டி ப்ரியா

பியூட்டி ப்ரியா

இதுநாள் வரை வாங்கி வைத்ததும் சாப்பிடாத பழங்களை என்ன செய்வதென தெரியாமல் ஜூஸ் செய்துகொண்டு மட்டுமே இருந்தனர். இப்போதெல்லாம் பழங்களை ஃபேசியல் செய்வதற்காகவே வாங்க ஆரம்பித்துவிட்டனர்.

தற்போது அதிகம் ஃபேசியலுக்குப் பயன்படுத்துவது பப்பாளிதான். அடுத்ததாக எலுமிச்சை. இவை குறைந்த விலையிலும் எக்காலமும் கிடைக்கக்கூடியதும் ஒரு காரணம். நாமும் செய்வோமா...

தேவையான பொருட்கள்: பப்பாளி விழுது அல்லது சாறு

எப்படி செய்வது?

பப்பாளி பேஸ்ட்டை முகத்தில் பயன்படுத்தி சுமார் 15 நிமிடங்கள் விடவும். பிறகு கழுவவும். சாறு போன்று எடுத்துக்கொண்டும் பயன்படுத்தலாம். சுமார் 20 நிமிடங்கள் ஊறவைத்துப் பிறகு குளிக்கவும்

எச்சரிக்கை: புதிதாக பிழியப்பட்ட எலுமிச்சை மற்றும் உறைநிலையில் இருக்கும் சாற்றைப் பயன்படுத்த வேண்டாம்.

எலுமிச்சைச் சாறு பயன்படுத்தும்போது சன்ஸ்கிரீன் தினமும் அணிந்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் எலுமிச்சை ஒவ்வாமை இருந்தால் எலுமிச்சைச் சாறு முக்கியமாகத் தோலுக்கு ஏற்ப இருக்கலாம்.

இந்த இயற்கை சரும வெளுப்பு வீட்டு வைத்தியம். தினசரி பயன்படுத்தலாம் அல்லது ஒவ்வொரு மாற்று நாளிலும் பயன்படுத்தலாம்.

வால்நெட், பாதாம் இவற்றைப் பொடியாக அரைத்து ஸ்கிரப்பாக பயன்படுத்தலாம். சருமத்தில் அதிக கறுப்பு - வெள்ளை இருந்தால் சர்க்கரையைப் பொடித்து அத்துடன் சிறிது பப்பாளி விழுதை சேர்த்து முகத்தில் அழுத்தி தடவ வேண்டும். இதனால் இறந்த செல்கள் உதிர்ந்து விடும். பின்னர் சிறிய டவலைக் கொண்டு வெந்நீரில் நனைத்து பொறுக்குமளவு சூட்டுடன் முகத்தின் மேல் போட்டு மூன்று நிமிடங்கள் கழித்து எடுக்க வேண்டும். இவ்வாறு இரண்டு அல்லது மூன்று முறை செய்ய வேண்டும். இந்த முறையை பின்னபற்ற முடியாதவர்கள் சிறிய பாத்திரத்தில் நீரை கொதிக்க வைத்து ஆவி பிடிக்க வேண்டும். அதனுள் வேப்பிலைகள் சிறிது போட்டு அதோடு சேர்த்து ஆவி பிடித்தால் மிகவும் நல்லது.

இதற்கு அடுத்தபடியாக ஃபேசியல் போடலாம். முகத்துக்கு பேக் போட நமக்கு தேவையான பழங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கேரட், ஆப்பிள், ஆரஞ்சு, உருளைக்கிழங்கு, தேன், வெள்ளரி, ஸ்ட்ராபெரி, பேரீச்சம் பழம், எலுமிச்சைச் சாறு சிறிதளவு. இவற்றில் ஏதாவது ஒன்றை நன்றாக அரைத்து பேக் போட்டு அரைமணி நேரத்துக்குப் பிறகு முகம் கழுவிப் பார்க்க அசந்து போகும் அழகைக்கண்டு நீங்களே ஆச்சர்யமடையலாம்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 3 ஜன 2018