மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

பால் கொள்முதலை அதிகரிக்கக் கோரிக்கை!

பால் கொள்முதலை அதிகரிக்கக் கோரிக்கை!

பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் கொள்முதலை அதிகரிக்க வேண்டுமெனக் கூட்டுறவு பால் உற்பத்திச் சங்கங்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து மத்திய வேளாண் துறை அமைச்சகம் ஜனவரி 2ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’அமுல் (குஜராத்), நந்தினி (கர்நாடகா), சுதா (பீகார்), வேர்கா (பஞ்சாப்), வீட்டா (ஹரியானா) ஆகிய முன்னணிக் கூட்டுறவுச் சங்கங்கள் எந்தவித பாகுபாடுமின்றி பால் கொள்முதல் செய்து வருகின்றன. நாட்டின் மொத்த பால் உற்பத்தியில் கூட்டுறவு சங்கங்கள் 10 சதவிகிதத்தை மட்டுமே கொள்முதல் செய்கின்றன. இந்த அளவை 20 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டுமென்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது. கடந்த ஆண்டு நவம்பரில் அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20 சதவிகிதம் கூடுதலாகப் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது பால் பவுடர் இருப்பு 1.17 லட்சம் டன்னாக உள்ளது. இந்நிதியாண்டின் முடிவில் இந்த அளவு 2 லட்சம் டன்னாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பால் உற்பத்தியை அதிகரிக்கவும், பால் பவுடர் இருப்பை அதிகரிக்கவும் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதலை அதிகரிக்க வேண்டும். மதிய உணவுத் திட்டம் மற்றும் அங்கன்வாடிகளில் பால் வழங்குவதை அனைத்து மாநிலங்களும் கட்டாயமாக்க வேண்டும். மேலும், பொது விநியோகத் திட்டத்தில் இணைப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளது.

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

புதன் 3 ஜன 2018