மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

இந்த மூன்று விஷயங்கள்!

இந்த மூன்று விஷயங்கள்!

தமிழகத்தில் அம்மா உணவகமும், கர்நாடகாவில் இந்திரா உணவகமும் குறைந்த விலையில் மக்களுக்கு உணவு அளித்துவருவதைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், ஒருவர் இன்றைய பொருளாதார நிலையில், நாள்தோறும் ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவளித்துவருகிறார் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

நொய்டாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அனூப் கன்னா என்பவர் தனது உணவகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு 5 ரூபாய்க்குச் சாப்பாடும், 10 ரூபாய்க்குத் துணிகளும் காலணிகளும் வழங்கிவருகிறார். கிட்டத்தட்ட, ஒருநாளைக்கு 500 மக்களின் தேவைகளை பூர்த்தி செய்துவருகிறார்.

Dadi Ki Rasoi என்ற உணவகம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அந்த உணவகத்தில் மெனு தொடர்ந்து மாறிக்கொண்டேவந்தது. நொய்டாவில் இதற்கு இரண்டு ஸ்டால்கள் உள்ளன.

இந்த முயற்சிக்குப் பின்னால் இருக்கும் உத்வேகம் குறித்து அனூப் கன்னா கூறுகையில், குழந்தைப் பருவத்திலிருந்து நான் சமூக சேவைகளில் ஈடுபட்டுவருகிறேன். என்னுடைய அப்பா சுதந்திரப் போராட்டத்தில் உற்சாகமாகப் பங்கேற்றவர். மகாத்மா காந்தி மற்றும் முஹம்மத் அலி ஜின்னாவுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அதனால், அதுபோன்ற வேலைகளில் ஈடுபட விரும்பினேன்.

இந்த உணவகத்துக்கு மாணவர்கள் முதல் வேலைக்குச் செல்பவர்கள் வரை வருகை தருவார்கள். என்னுடைய இந்தச் சேவைக்கு என் குடும்பத்தினர் மிகுந்த ஆதரவு அளித்து வருகின்றனர். ஆரம்பத்தில் சமையல் கூடம் அமைப்பதற்கு ரூ.30,000 முதலீடு செய்தேன். இதையடுத்து, மக்கள் நன்கொடை கொடுக்க ஆரம்பித்தனர்.

அதிகம் பேர் இந்த முயற்சியில் என்னோடு இணைந்துள்ளனர். இதுபோன்ற சேவையில் ஈடுபடுவது கடினமல்ல.அதைச் செயல்படுத்துவதற்குத் தேவையான ஊக்கம் இருந்தால் போதும். எதற்காகவும் நாம் கை ஏந்தி நிற்கக் கூடாது. பொருளாதார ரீதியாகப் பலவீனமான மக்களை நான் பிச்சைக்காரர்களாக நடத்த விரும்பவில்லை. எந்தவொரு தனிநபருக்கும் உணவு, துணி, மருந்து ஆகியவை அத்தியாவசியத் தேவைகள். சமுதாயத்தில் பொருளாதார ரீதியாகப் பலவீனமான பிரிவினருக்கு மலிவு விலையில் இந்த மூன்று விஷயங்களையும் அளிப்பதே என்னுடைய நோக்கம் என கூறினார்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

புதன் 3 ஜன 2018