மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

இந்திக்கு 400 கோடி!

இந்திக்கு 400 கோடி!

ஐ.நா சபையின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இந்தியை இடம்பெறச் செய்வதற்காக 400 கோடி ரூபாய் கூட செலவு செய்யத் தயார் என்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இந்தி மொழியை சர்வதேச அளவில் பிரபலமாக்கவும், ஐக்கிய நாடுகளின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இந்தியை இடம்பெறச் செய்யவும் மத்திய அரசு பல்வேறு வகையிலும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இன்று (ஜனவரி 3) மக்களவை கேள்வி நேரத்தின் போது ஐ.நா.வில் இந்தியை அலுவல் மொழியாக்கும் திட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ஐநா சபையின் சட்டவிதிகளின் படி, மொத்த உறுப்புநாடுகளில் (193) மூன்றில் ஒரு பங்கு உறுப்பு நாடுகள் ஆதரித்தால் மட்டுமே இந்தியை ஐநாவின் அலுவல் மொழிகளுள் ஒன்றாக்க முடியும்" என்று தெரிவித்தார்.

இதற்கு பாஜக உறுப்பினர் ஒருவர் எழுந்து, ஐநாவின் அலுவல் மொழிகளுள் ஒன்றாக இந்தியை இடம்பெறச் செய்வதற்கு ரூ.40 கோடி வரை செலவாகும் என்றார். அதற்கு "ஐநாவின் அலுவல் மொழிகளுள் ஒன்றாக இந்தியை கொண்டுவர 40 கோடியல்ல, 400 கோடி கூட செலவு செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது" என்று சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

இதற்கிடையே குறுக்கிட்டு பேசிய காங்கிரஸ் எம்பி சசி தரூர் , இந்தியாவில் பல்வேறு மொழிகள் இருக்கும்போது ஏன் இந்தியை மட்டும் ஐநாவின் அலுவல் மொழிகளுள் இடம்பெறச் செய்ய வேண்டும். இந்தி இந்தியாவின் அலுவல் மொழி மட்டுமே, தேசிய மொழி அல்ல என்றார். மேலும், நாளை தமிழகம் அல்லது மேற்கு வங்கத்திலிருந்து பிரதமர்கள் வரும்போது , நாம் ஏன் அவர்களை ஐநாவில் இந்தியில் பேச வற்புறுத்த வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

புதன் 3 ஜன 2018