மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

ஒரே ஆண்டில் மூன்று படங்கள்!

ஒரே ஆண்டில் மூன்று படங்கள்!

விக்ரம் நடிப்பில் விக்ரமின் சாமி 2, ஸ்கெட்ச், துருவ நட்சத்திரம் ஆகிய மூன்று படங்களும் இந்த ஆண்டில் வெளிவரவிருக்கின்றன. அந்த வகையில் 2018 விக்ரமுக்கு மிகவும் மகிழ்ச்சியான ஆண்டாக இருக்கும் என்று சொல்லலாம்.

சாமி படத்தின் வெற்றிக்குப் பிறகு விக்ரம் -ஹரி கூட்டணி மீண்டும் இணைந்து அதன் இரண்டாம் பாகத்தினை உருவாக்கிவருகின்றனர். முதல் பாகத்தில் பெருமாள் பிச்சை கேரக்டரில் கோட்டா சீனிவாச ராவ் வில்லனாக மிரட்டினார். தற்போது உருவாகிவரும் இரண்டாம் பாகத்தில் பெருமாள் பிச்சையின் மகன்களாக உருவெடுத்திருக்கும் ராவண பிச்சை (பாபி சிம்ஹா), மகேந்திர பிச்சை (ஓ.ஏ.கே. சுந்தர்), தேவேந்திர பிச்சை (ஜான் விஜய்) ஆகியோர் மிரட்ட இருக்கின்றனர்.

சாமி படத்தின் தொடர்ச்சியான இரண்டாம் பாகத்தின் கதை 29 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கவிருக்கிறது என்பதைச் சமீபத்தில் வெளியான போஸ்டர் மற்றும் புகைப்படங்கள் உறுதி செய்தன. தற்போது படத்தின் 45 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதுடன் புகைப்படமும் வெளியாகிஇருக்கிறது.

விக்ரமின் `ஸ்கெட்ச்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவர இருக்கிறது. கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் துருவ நட்சத்திரமும் இந்த ஆண்டில் வெளிவர இருக்கிறது. சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை ரம்ஜான் தினத்தை முன்னிட்டு ஜுன் 14ஆம் தேதி வெளியிட இருப்பதாகப் படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதனால் ஒரே ஆண்டில் விக்ரமின் மூன்று படங்கள் வெளிவரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

புதன் 3 ஜன 2018