மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

பீட்சாவும் சாம்பாரும் ஆன்மிக அரசியல் :அப்டேட் குமாரு

பீட்சாவும் சாம்பாரும் ஆன்மிக அரசியல் :அப்டேட் குமாரு

தமிழ்நாட்டு வரலாற்றுலயே அதிமுகவுக்கு எதிரா ஜெயா டிவியில நியூஸ் பார்த்தது நாம தான். ஒன்றரை வருசத்துக்கு முன்னால இதெல்லாம் நினைச்சு பார்க்க முடியுமா? கட்சியை வளைச்சுட்டோம், சின்னத்தை மீட்டுட்டோம்னு தம்பட்டம் அடிக்க கூட நமக்குன்னு ஒரு டிவி இல்லாம போச்சேன்னு புலம்பிட்டு தான் இன்னைக்கு பன்னீரும், பழனிசாமியும் கட்சிக்குன்னு ஒரு பேப்பரும் டிவியும் ஆரம்பிக்க போறதா சொல்லிருக்காங்க. இருக்குற சேனலை பார்த்து சாகுறது மட்டுமில்லாம இதுவேறயான்னு யாரும் தலையில கை வைக்காதீங்க. ஆதித்யா, சிரிப்பொலிக்கு எல்லாம் பயங்கர டஃப் கொடுக்குற மாதிரி தான் இருக்குமுன்னு சொல்லிக்கிடுறாங்க. அறிவியலும் செல்லூரும், திண்டுக்கல்லின் சொல்வதெல்லாம் சத்தியம், பண நலனுக்கு பன்னீரின் தியானம், எடப்பாடி அரசியல் அதிரடின்னு நிகழ்ச்சிகள் வெளுத்து வாங்கும்னு பேச்சா இருக்கு. இன்னொரு பக்கம் மறுபடியும் அணிகள் இணைஞ்சுரும்னு சொல்லுதாங்களே உண்மையா? ஒருவேளை கை குலுக்கி, கட்சியை இணைச்சாலும் டிவியை எப்படி இணைப்பாங்க. ஏற்கனவே இதே மாதிரி அணிகள் பிரிஞ்சு தானே அந்த பக்கம் ஒரு டிவியை தொடங்குனாங்க. இப்ப ஒன்னுக்கு ரெண்டா ஓடிக்கிட்டு இருக்கு. சரி சேனலை எத்தனை வேணும்னாலும் கொண்டு வாங்க. ரேட்டை மட்டும் ஏத்திடாதீங்க.

@senthilcp

பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளுநர் ஆய்வு அவசியமில்லை - தமிழிசை #மாநில முதல்வர்களை இதுக்கும்மேல மட்டம் தட்ட முடியாது

@Akku_Twitz

பாபா முத்திரையில் இருந்த தாமரை நீக்கம் ரஜினிகாந்த் அதிரடி

தலீவரே வாழ்க்கைல பயமிருக்கனும் பயமே வாழ்க்கையா ஆய்டகூடாது

@Kozhiyaar

போதிய பேருந்து விடாதவனை விட்டுவிட்டு, படியில் தொங்குபவன் பின்புறத்தில் அடிக்கும் கையாலாகாத சமூகம் இது!!!

@HAJAMYDEENNKS

ஹோட்டலில் குழந்தைகள் கண்ணை மூடிக்கொண்டு ஆர்டர் செய்வதற்காக உருவாக்கப்பட்டதுதான் பூரி...!

@Kozhiyaar

எந்த பிரச்சனையையும் பார்த்தும் பார்க்காமல் போவதற்கு பெயர் 'ப்ராடிகலாக' இருப்பது!!!

@Jeyachandra Hashmi

'சார் நீங்க அரசியலுக்கு வரப் போறீங்களா ஆன்மீகத்துக்கு போகப் போறீங்களா ?'

'ஆன்மீக அரசியலுக்கு வரப் போறேன்'

@senthilcp

விரைவில் உள்ளாட்சி தேர்தல் தயாராகுமாறு அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு ஓபிஎஸ்-ஈபிஎஸ் அறிவுறுத்தல் # 20 ரூபா நோட்டுக்கட்டு இவங்களும்,ரெடி பண்ணனுமா?

@கருப்பு கருணா

ஒரு இருபது வருசத்துக்கு முன்னாடி வள்ளின்னு ஒரு படத்தை தனது நண்பர் நட்ராஜ்க்காக ரஜினி தயாரித்தார்.அதற்கு கதை வசனம் ரஜினிதான் என நினைவு. அப்படத்தில் ஒரு முதல்வர் பாத்திரம் வரும். இன்று அவர் சொல்லும் ஆன்மீக அரசியலின் வடிவத்தை அந்த முதல்வர் அச்சு அசலாக பிரதிபலிப்பார்.

புள்ளையார் சுழிய அப்பவே போட்டுட்டாரு!

@senthilcp

கர்நாடகா, மராட்டியத்தில் ரஜினிகாந்த் கட்சி தொடங்க முடியுமா? -சீமான் . #பிறந்த,வளர்ந்த,ஊர்"ல"தான்,வேலைக்கு"போகனும்,சம்பாதிக்கனும்னு"சட்டம் இருக்கா?எங்கே,ஆபர்"இருக்கோ"அங்கே

@Kannan_Twitz

புத்தர் உருவில் மோடியை பார்க்கிறோம்!

காந்தியாக ரஜினியை பார்க்கிறோம்!

இவர் உருவில் அவரை பார்க்கிறாம்,

அவர் உருவில் இவரை பார்க்கிறோம்றீங்களே!

எப்போதான்யா அவர் உருவில் அவரையே பார்ப்பீங்க?

ஒருவர் உருவத்திலேயே அவரை பார்க்க முடியாட்டி எப்படி அவர் வார்த்தையை மட்டும் நம்புவது?

@CreativeTwitz

ரஜினி மன்றத்தில் இருந்து திமுகவினர் வெளியேறவேண்டும் - மா. சுப்பிரமணியன்

// வெளிய வந்தா உதயநிதி மன்றதுல சேத்து உட்ருவாய்ங்க மண்ட பத்ரம்

@Nithya

சிலர் உண்மையென்று சொல்லும் சில பொய்கள் தரும் சந்தோஷத்தை ஏற்கும் மனம்,

அவர் சொல்லும் உண்மையை ஏற்க மறுக்கிறது...!

@Jeyachandra Hashmi

‘பீட்சா வேணுமா இல்ல இட்லி சாம்பார் வேணுமா சார்?’

‘பீட்சாவே கொடுங்க. தொட்டுக்க மட்டும் கொஞ்சம் சாம்பார் எடுத்துட்டு வாங்க’

ஆன்மீகஅரசியல்

Syed Rizwan

உலகின் மூத்த குடி... (தமிழன்)

ஆனா மாட்டு மூத்ரத்த குடிக்ரவனுங்க..

நம்பள வெச்சு செய்ரானுங்க...

@Aruns212

பஸ்ஸிற்குக் கூடத் தெரிந்திருக்கிறது,கடைசியில் இருப்பவனைத் தான் மேலே தூக்கிப் போட வேண்டும் என்று.

@kalpbagya32

ஜெயலலிதாவின் வாரிசு என்பதை நிரூபித்துள்ளார்

டி.டி.வி தினகரன்-திருமாவளவன்

டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து ரிசல்ட் சொல்ர டாக்டர் மாதிரியே பேசராரு.......

@வாசுகி பாஸ்கர்

நான் அரசியலுக்கு வர போறேன்

அண்ணன்: “தம்பி தமிழனா?”

“ஆமாண்ணே”

அண்ணன்: “தமிழன்னு மொட்டையா சொன்னா எப்படி, விவரமா சொல்லு”

“விவரமா தான்னே சொல்றேன், தமிழன் தான்”

அண்ணன்: “எதை வச்சி சொல்ற?”

“எங்க தாத்தாவுக்கு தாத்தா பொறந்ததே இங்க தான்னே, தமிழ் தான் பேசுறோம், தமிழ் தான் படிச்சோம், தமிழ்நாடு தான் பூர்வீகம்”

அண்ணன்: “அட அதெல்லாம் சரிப்பா, புரிய மாட்டேங்கிதே உனக்கு. சரி “என்ன ஆளுங்க”

“ஆளுங்கனா?”

அண்ணன்: “சாதியை சொல்லுடா”

“இதை முதல்லயே கேக்க வேண்டியது தானே, தமிழன் கிமிழன்னு கிடந்து ஏன் உருட்டிட்டு இருந்த”

-லாக் ஆஃப்

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

புதன் 3 ஜன 2018