மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

சபரிமலை ஐயப்பன் கோயிலின் பெயர் மாற்றம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலின் பெயர் மாற்றம்!

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலின் பெயரை மாற்றப்போவதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் ஏ பத்மகுமார் நேற்று (ஜனவரி 2) அறிவித்தார்.

திருவிதாங்கூர் தேவசம் போர்டு வசம் மொத்தம் 1248 கோவில்கள் உள்ளன. அதில் சபரிமலை ஐயப்பன் கோயில்தான் மிகப் பெரிய கோயில். ஆண்டுதோறும் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா , ஆந்திராவைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மாலையணிந்து, கடுமையான விரதங்களை மேற்கொண்டு, இருமுடி சுமந்து, சபரிமலைக்கு வந்து, ஐயப்ப சாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலின் பெயரை ’சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தா’ என மாற்ற உள்ளதாகத் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி, காங்கிரஸ் கட்சியால் நியமிக்கப்பட்ட திருவிதாங்கூர் தேவசம் போர்டின் முன்னாள் தலைவர் பிராயர் கோபாலகிருஷ்ணன் சபரிமலை கோயிலின் பெயரை ‘சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்’ என மாற்றினார். அதன்படி, பம்பையில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோயில் வரை உள்ள அறிவிப்புப் பலகைகள் மற்றும் விளம்பரப் பலகைகள் அனைத்தும் மாற்றப்பட்டன. புதிதாகப் பொறுப்பேற்ற திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் சபரிமலை கோயிலின் பெயரை மீண்டும் ‘சபரிமலை ஸ்ரீ தர்மசாஸ்தா கோயில்’ என மாற்ற முடிவு செய்துள்ளார்.

சுற்றுலாத் துறை மற்றும் கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன், “உச்ச நீதிமன்றத்தில் பெண்கள் தொடர்ந்த வழக்கில் வெற்றி பெறுவதற்காகத்தான் முந்தைய தேவசம் போர்டு சபரிமலை கோயிலின் பெயரை மாற்றியது. தற்போது சபரிமலை கோயிலுக்கு மீண்டும் பழைய பெயரைக் கொண்டு வர புதிய தேவசம் போர்டு தீர்மானித்துள்ளது. அந்த முடிவை நான் வரவேற்கிறேன் கோயில் தொடர்பான பத்திரங்களிலும் ஏற்கனவே பெயர் மாற்றப்பட்டுள்ளது. மாற்று விவகாரத்தை அரசு அதிகமாக வெளிப்படுத்த விரும்பவில்லை” எனக் கூறியுள்ளார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

புதன் 3 ஜன 2018