மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

ஜெ.சிகிச்சை ஆவணம்: அப்பல்லோவுக்கு அவகாசம்!

ஜெ.சிகிச்சை ஆவணம்: அப்பல்லோவுக்கு அவகாசம்!

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்களை அளிக்க அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திற்கு வரும் 12ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டுமென அப்பல்லோ நிர்வாக இயக்குனர் பிரதாப் ரெட்டி, அவரது மகள் ப்ரீத்தா ரெட்டி ஆகியோருக்கு கடந்த டிசம்பர் 22ஆம் தேதி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. அப்பல்லோ நிர்வாகம் சார்பில் ஆவணங்களைத் தாக்கல் செய்ய ஜனவரி 5ஆம் தேதி வரை அவகாசம் கோரப்பட்டதையடுத்து, அவகாசம் வழங்கப்பட்டது.

ஆனால் ஜனவரி 5ஆம் தேதிக்குள் ஆதாரங்களை ஒப்படைக்க முடியாத நிலை உள்ளதாகவும், கூடுதல் அவகாசம் வேண்டும் என்றும் அப்பல்லோ நிர்வாகத்தின் வழக்கறிஞர் மீண்டும் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்ற விசாரணை ஆணையம், ஜனவரி 12ஆம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது. அன்றைய தினம் அப்பல்லோ நிர்வாகத்தின் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி ஆவணங்களைத் தாக்கல் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த மாதம் செய்தியாளர்களிடம் பேசிய அப்பல்லோ நிர்வாக இயக்குனர் பிரதாப் ரெட்டி, ஜெயலலிதா ஆபத்தான நிலையில்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று முதல்முறையாக ஒப்புக்கொண்டார். விசாரணை ஆணையத்திலிருந்து சம்மன் வந்தால் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

புதன் 3 ஜன 2018