மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

முடக்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டம்!

முடக்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டம்!

ஆட்சியாளர்கள் ஊழல் செய்ய வேண்டும் என்பதற்காகத் தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் முடக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டப்படி இந்தியா முழுவதும் 90 பொலிவுறு நகரங்களை அமைக்கும் பணி ரூ. 1,91,155 கோடியில் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இத்திட்டத்தின்படி தமிழகத்தில் 11 நகரங்கள் ஸ்மார்ட் நகரங்களாக மாற்றப்படவுள்ளன. இத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் இத்திட்டங்களில் குறிப்பிடத்தக்க வகையில் எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.

இந்த சூழ்நிலையில் இது குறித்து இன்று( ஜனவரி 3) அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், "தமிழகத்திலுள்ள 11 பொலிவுறு நகரங்கள் திட்டத்திற்காக இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் 0.5% கூடச் செலவிடப்படவில்லை. எடுத்துக்காட்டாக சென்னையில் பொலிவுறு நகரம் திட்டம் ரூ.1366 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது. இதில் முதல் கட்டமாக மத்திய அரசின் சார்பில் ரூ.196 கோடி, மாநில அரசின் சார்பில் ரூ.200 கோடி, சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.100 கோடி என மொத்தம் ரூ.496 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிதியிலிருந்து இதுவரை ரூ.3.82 கோடி மட்டுமே, அதாவது 0.77% மட்டுமே செலவிடப்பட்டிருப்பதாக மத்திய அரசு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார் ராமதாஸ்.

"சென்னை, கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், வேலூர் ஆகிய ஆறு மாநகராட்சிகளில் பொலிவுறு நகரங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முதல் கட்டமாக ரூ. 2000 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந்த நிதியில் இதுவரை ரூ.12.21 கோடி மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது. பொலிவுறு நகரங்கள் திட்டங்களுக்குப் போதிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதை விரைவாகச் செயல்படுத்தத் தமிழக அரசு தவறிவிட்டது.

தமிழகத்தில் மட்டும் பொலிவுறு நகரங்கள் அமைப்பதற்கான ஒவ்வொரு பணிக்கும் மாநில அளவிலான குழுவின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பது முறையல்ல. ஒவ்வொரு திட்டப் பணிக்கும் தனித்தனியாக கையூட்டு வாங்க வேண்டும் என்பதுதான் இந்த நிபந்தனையின் நோக்கம். ஆட்சியாளர்கள் ஊழல் செய்ய வேண்டும் என்பதற்காக வளர்ச்சித் திட்டங்களை முடக்கக் கூடாது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 3 ஜன 2018