மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

நிறம் மாறும் முகமூடி!

நிறம் மாறும் முகமூடி!

இசைக்கு ஏற்றாற்போல் மாறும் முகமூடியை கனடாவைச் சேர்ந்த அறிமுக நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கனடா நாட்டினைச் சேர்ந்த அவுட்லைன் என்ற புதிய நிறுவனம் LED லைட்களை கொண்ட புதுமையான முகமூடி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதன் மாறுவேடத்திற்காக முகமூடிகளைக் கண்டறிந்தான். அதன் பரிணாம வளர்ச்சியில் பல்வேறு விதமான முகமூடிகள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த டிஜிட்டல் முகமூடியானது அனைத்து பயனர்களுக்கும் பயன்படும் வகையிலும், பார்ட்டிகளில் அனைவரும் வித்தியாசமான கொண்டாட்டத்தை வெளிக்கொணரும் வகையிலும் கண்டறியப்பட்டுள்ளது.

நன்கு மடங்கும் தன்மையும் இதில் உள்ளதால் பெரும்பாலும் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கப்படுகிறது. இந்தப் புதிய முகமூடியின் விலை ரூ. 2,400. நடன நிகழ்ச்சிகள் நடத்தும் நபர்கள் இதனைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இதன் பயன்பாடு அமைந்துள்ளது. புதுமையான இந்தக் கண்டுபிடிப்பு மக்கள் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பைப் பெற உள்ளது எனப் பொறுத்திருந்து காண்போம்.

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

புதன் 3 ஜன 2018