மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

மாற்றுத் திறனாளிகளுக்குத் தடை!

மாற்றுத் திறனாளிகளுக்குத் தடை!

வருடாந்திர ஹஜ் புனித யாத்திரையை மேற்கொள்ள மாற்றுத் திறனாளிகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இஸ்லாத்தின் அடிப்படையான ஐந்து கடமைகளில் இறுதிக் கடமை ஹஜ் என்னும் புனிதப் பயணம் மேற்கொள்ளுதல். அதன்படி உலக நாடுகள் அனைத்திலிருந்தும் சவுதி அரேபியாவிலுள்ள மக்கா நகருக்குச் சென்று வருவதுண்டு. இந்தியாவிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்வர்.

இந்த ஆண்டுக்கான ஹஜ் பயணம் ஆகஸ்ட் 19 முதல் 24 வரை நடை பெறவுள்ளது. இந்நிலையில் ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கான 'தகுதி' தொடர்பான வழிகாட்டுதல்களில், உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் மனநலம் குன்றியவர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியாது என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பு அரசியலைப்பு சட்டம் 14, 21 மற்றும் 25, வழங்கியுள்ள மத சமத்துவ மற்றும் சுதந்திர உரிமைகளுக்கு எதிரானது என்று கூறி இந்த உத்தரவை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் கவுரவ் பல்சால் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

புதன் 3 ஜன 2018