மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

சமரசத்துக்குத் தயார்!

சமரசத்துக்குத் தயார்!

எடப்பாடி - பன்னீர் தலைமையிலான அதிமுக எங்களுடன் வந்தால் அவர்களுடன் இணைந்து உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ஆளுங்கட்சி வேட்பாளர் மதுசூதனனைத் தோற்கடித்து தினகரன் வெற்றிபெற்றார். தற்போதைய நிலையில் பாஜக - அதிமுக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. அதனை நிரூபிக்கும் விதமாக மாநில அரசின் உரிமைகளுக்கு எதிரான விதத்திலேயே மத்திய அரசு செயல்படுகிறது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டியளித்திருந்தார்.

இந்தச் சூழ்நிலையில் தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் இன்று (ஜனவரி 3) செய்தியாளர்களிடம் பேசியபோது, "இவ்வளவு பெரிய பலத்தை மீறி தினகரன் குக்கர் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். அதிமுகவை வழிநடத்தும் தகுதி தினகரனுக்குதான் உள்ளது. எடப்பாடி தரப்பு அவரைப் பாராட்டாமல் இன்னும் குற்றம் சாட்டிக்கொண்டுதான் உள்ளது. எனவே அவர்கள் தங்களது தோல்வியை ஒப்புக்கொண்டு, எங்களுடன் சமரசம் பேச முன்வர வேண்டும்" என்று தெரிவித்தார்.

மேலும் செய்தியாளர்களின் கேள்விகளும், அதற்கு தங்க தமிழ்ச்செல்வன் அளித்த பதில்களும் பின்வருமாறு.

மூன்று மாதங்களில் ஆட்சி மாற்றம் நடைபெறும் என்று கூறியுள்ளீர்களே?

இன்னும் 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்க வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தீர்ப்பு வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடங்கப்படும். ஆட்சி மாற்றமா, நிர்வாகிகள் மாற்றமா, அமைச்சரவை மற்றும் முதலமைச்சர் மாற்றமா என்று அப்போது தெரியவரும்.

எடப்பாடி பழனிசாமியும் எங்களுடைய ஸ்லீப்பர் செல்தான் என்று முன்பு கூறினீர்களே?

ஒரு காலத்தில் பாஜகவிற்கு பயந்து தங்கள் மீது வழக்கு வந்துவிடும் என்ற காரணத்திற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் எங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் நடந்து முடிந்த இடைத் தேர்தலில் பாஜகவுக்கு டெபாசிட்கூடக் கிடைக்கவில்லை. அதிமுகவும் ஓட்டுக்கு ஆறாயிரம் ரூபாய் பணம் கொடுத்ததால்தான் டெபாசிட் பெற்றது. இல்லையென்றால் அதற்கும் டெபாசிட் கிடைத்திருக்காது.

தற்போது பாஜகவும் அதிமுகவைக் கைகழுவி விடும் நிலையில்தான் உள்ளது. குருமூர்த்தி மோசமான வார்த்தைகளை அதிமுகவினர் மீது பயன்படுத்தியுள்ளார் என்றால் மேலிடத்திலிருந்து சொல்லாமல் அவர் அப்படி பேசியிருக்க வாய்ப்பில்லை. இனிமேல் எடப்பாடி - பன்னீர் இருவருக்கும் ஆதரவு தினகரன்தான். ஆகவே இவர்கள் எங்கள் பக்கம் வந்துதான் ஆக வேண்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது. கூடிய விரைவில் நல்ல செய்தி வரும்.

உள்ளாட்சித் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. அதனைத் தனியாகச் சந்திப்பீர்களா அல்லது அதற்குள் அதிமுக ஒன்றிணைந்துவிடுமா ?

உள்ளாட்சித் தேர்தல் வந்தால் அதனைத் தனித்துச் சந்திக்கத் தயாராக உள்ளோம். எடப்பாடி -பன்னீர் தரப்பினர் எங்களுடன் இணைந்தால் அவர்களுடன் இணைந்து தேர்தலை சந்திக்கவும் தயாராக உள்ளோம்.

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆளுநரை மக்கள் ஆளுநர் என்று குறிப்பிட்டுள்ளாரே?

காலில் விழுவதற்கும் ஒரு எல்லை உண்டு. மானம், ரோஷம், வெட்கம் இருந்தால் ஒரு அமைச்சர் இவ்வாறு பேசக் கூடாது. மாநில சுயாட்சி என்று ஒன்று உள்ளது. இந்த விவகாரத்தில் திமுகவை நான் வரவேற்கிறேன். பல இடங்களில் அவர்கள் கருப்புக் கொடி காட்டி ஆளுநருக்கு எதிராகப் போராடினர்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

புதன் 3 ஜன 2018