மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

மாதவனை இயக்கும் சற்குணம்

மாதவனை இயக்கும் சற்குணம்

மாதவன் அடுத்ததாக இயக்குநர் சற்குணம் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

‘களவாணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சற்குணம். இதனையடுத்து வாகை சூட வா, நய்யாண்டி, சண்டிவீரன் ஆகிய படங்களை இயக்கினார். மேலும், ‘மஞ்சப்பை, டோரா’ ஆகிய 2 படங்களை தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘சற்குணம் சினிமாஸ்’ மூலம் தயாரிக்கவும் செய்தார்.

விமல் நடிப்பில் உருவான களவாணி, வாகை சூட வா ஆகிய முதலிரண்டு படங்களுக்கு கிடைத்த வரவேற்பு, நய்யாண்டி, சண்டிவீரன் படங்களுக்கு கிடைக்கவில்லை. தற்போது அவர் இயக்கவுள்ள புதிய படத்தில் மாதவன் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு ஜிப்ரன் இசையமைக்கவுள்ளார். ‘காமன் மேன்’ நிறுவனம் சார்பில் பி.கணேஷ் தயாரிக்கவுள்ளார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

புதன் 3 ஜன 2018