மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

2017: இந்தியாவில் 115 புலிகள் மரணம்!

2017: இந்தியாவில் 115 புலிகள் மரணம்!

2017ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்தமாக 117 புலிகள் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் புலி இனம் அழிந்துவருவதால், அவற்றைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புலிகளைப் பாதுகாக்கும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 29ஆம் தேதி சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. எனினும், புலிகள் உயிரிழந்துவருவது அதிகரித்து வருகிறது.

இந்தியாவின் தேசிய புலி பாதுகாப்பு ஆணையத்தின் அதிகாரபூர்வத் தகவல் தளமான டைகர் நெட்டின் தகவல்படி, இயற்கையாகவும் மின்சாரம் தாக்கியும் வேட்டையாடப்பட்டும் சாலை விபத்துகளில் மற்றும் பொறிகளில் சிக்கியும் 98 புலிகள் இறந்துள்ளன. 17 புலிகளின் எலும்புகள், தோல்கள், நகங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்தியாவில் 2017ஆம் ஆண்டு மொத்தமாக 115 புலிகள் இறந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அதில், மத்தியப்பிரதேச மாநிலத்தில்தான் அதிக அளவிலான புலிகள் உயிரிழந்துள்ளன. மத்தியப்பிரதேச மாநிலத்தில் 26 புலிகளும், மகாராஷ்டிர மாநிலத்தில் 18 புலிகளும், கர்நாடக மாநிலத்தில் 15 புலிகளும், உத்தரகாண்ட் மாநிலத்தில் 15 புலிகளும், அசாம் மாநிலத்தில் 9 புலிகளும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 புலிகளும், தமிழகத்தில் 3 புலிகளும், கேரளாவில் 2 புலிகளும், ஆந்திர மாநிலத்தில் 1 புலியும், ராஜஸ்தான் மாநிலத்தில் 1 புலியும், ஒடிசாவில் 1 புலியும் இறந்துள்ளன.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

புதன் 3 ஜன 2018