மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

போலியோ சொட்டு மருந்து!

போலியோ சொட்டு மருந்து!

போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான ஆயத்தப் பணிகளை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார்.

புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறை மூலம் ஆண்டுதோறும் 2 முறை குழந்தைகளுக்கு போலியோ நோயை தடுக்கும் சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளில் சுகாதாரத்துறை ஊழியர்கள், தன்னார்வல தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ஈடுபடுவார்கள்.

இந்த ஆண்டில் வருகிற ஜனவரி 28 மற்றும் மார்ச் 11 ஆம் தேதிகளில் சொட்டு மருந்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை சுகாதாரத்துறை ஏற்பாடு செய்து வருகிறது.

இந்தநிலையில் புதுச்சேரி சட்டமன்ற குழு அறையில் நேற்று(ஜனவரி 2) நடந்த நிகழ்ச்சியில் ஒரு குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கி பணிகளை முதலமைச்சர் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ, சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

4 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் ...

3 நிமிட வாசிப்பு

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் போக்குவரத்து மாற்றம்!

புதன் 3 ஜன 2018