மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

சென்னை தீவுத்திடலில் 44ஆவது பொருட்காட்சி!

சென்னை தீவுத்திடலில் 44ஆவது பொருட்காட்சி!

சென்னையில் தீவுத்திடலில் 4ஆ4வது அகில இந்திய சுற்றுலா பொருட்காட்சி ஜனவரி 6ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தீவுத்திடலில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இறுதி முதல் பிப்ரவரி மாதம் வரை 60 நாட்கள் அரசு பொருட்காட்சி நடைபெறும். இதில் மத்திய, மாநில அரசுத் துறைகளின் அரங்குகள், பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறும். ஆனால், சில ஆண்டுகளாக ஏற்பட்ட இயற்கை சீற்றங்களால் டிசம்பர் மாத இறுதியில் தொடங்க வேண்டிய பொருட்காட்சி ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. அதன்படி, வரும் சனிக்கிழமை (ஜனவரி 6) அல்லது ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 7) சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பொருட்காட்சியை திறந்து வைக்கிறார்.

அரசு சார்பில் அரங்குகள் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. மத்திய, மாநில அரசுத் துறைகளின் திட்டப்பணிகள், சாதனைகள் குறித்து அரங்குகள் நிறுவும் பணி இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்தப் பொருட்காட்சியில் விமான ஓடு பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதில் உண்மையான விமானம் நிறுத்தப்படும். விமானத்தில் சுற்றுலா பயணிகளை ஏற்றி சிறிது தூரம் கொண்டு சென்று மீண்டும் அதே இடத்துக்கு வந்துவிடப்படுவர். எரிமலை வெடித்து சிதறுவதுபோல் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. உலகின் 7 அதிசயங்களான தாஜ்மகால், ஈபிள் டவர், பைசா நகரின் சாய்ந்த கோபுரம், எகிப்த் பிரமீட், சீன பெருஞ்சுவர் உள்ளிட்டவை தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர் பேசும் கிளி, குழந்தைகள் விளையாடுவதற்காக பார்பிஹவுஸ் உள்ளிட்ட விளையாட்டு பொம்மைகள் இடம்பெற்றுள்ளன. பிரபல ஜவுளிக்கடைகளின் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 300 கடைகளும், 65 அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

பொங்கல் பண்டிகை நாட்களில் பொருட்காட்சிக்கு லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதால் பொருட்காட்சியில் தினமும் கலைநிகழ்ச்சிகள், நாடகம் போன்றவை இடம் பெறும். நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு 25 ரூபாயும், சிறுவர்கள், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு 15 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையும் , ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரையும் பொருட்காட்சி திறந்திருக்கும். மக்களின் வசதிக்காக தீவுத் திடல் முன்பு மாநகர பேருந்துகள் நின்று செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்பொருட்காட்சி 70 நாட்கள் நடைபெறவுள்ளது.

2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கிய பொருட்காட்சியில் அரங்குகள் முழுமையாக அமைக்கப்படவில்லை. தனியார் கடைகளுக்கான ஸ்டால்களும் இடம் பெறவில்லை. பொழுதுபோக்கு சாதனங்களும் செயல்படவில்லை. மக்கள் சுற்றிப் பார்ப்பதற்கு எந்த அம்சமும்

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

புதன் 3 ஜன 2018