மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

தினகரன் அறையில் சசிகலா

தினகரன் அறையில் சசிகலா

ஆர்.கே.நகர் எம்எல்ஏவான தினகரன் இன்று அலுவலகத்துக்குச் சென்றதுடன் தொகுதியின் குடிநீர் பிரச்சினை குறித்துப் பெருநகரக் குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

ஆர்.கே.நகர். இடைத் தேர்தலில் தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அன்றே எம்எல்ஏ என்பதற்கான சான்றிதழை அவர் பெற்றுக்கொண்டாலும் தொகுதிக்குச் செல்லாமல் இருந்துவந்தார்.

தண்டையார்பேட்டை இரட்டைக் குழி வீதியில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்துக்குத் தினகரன் இன்று முதன்முறையாக வந்தார். அப்போது அவரது ஆதரவாளர்கள் மேளதாளத்தோடு அவருக்கு வரவேற்பு அளித்தனர். அலுவலகச் சுவரில் எம்ஜிஆர் , ஜெயலலிதா ஆகியோர் புகைப்படங்களுடன் சசிகலாவின் புகைப்படமும் இடம்பிடித்திருந்தது. மேசையில் ஜெயலலிதா படம் மட்டும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஆர்.கே.நகரில் உள்ள நாகவள்ளி அம்மன் கோயிலுக்கு சென்ற அவர் பூரண கும்ப மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

முதல் கையெழுத்து

எம்எல்ஏ அலுவலத்துக்குச் சென்ற அவர் ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட 42 மற்றும் 43ஆவது வார்டுகளில் உள்ள தெருக்களில் குடிநீருடன் எண்ணெய்க் கசிவும் கலந்திருக்கிறது. பிற பகுதிகளில் குடிநீருடன் கழிவு நீரும் கசிந்துவருவதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ள தினகரன், சுகாதாரமான குடிநீர் வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்னென்ன என்பது குறித்து தெரியப்படுத்தும்படி அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தொகுதி மக்களின் பிரச்சினைகள் குறித்து சட்டப்பேரவையில் குரல் எழுப்புவேன். சட்டப்பேரவைக்கு வருபவர்களை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கவே இவ்வளவு அவசர அவசரமாகக் கூட்டத்தைக் கூட்டியுள்ளனர். சட்டமன்றத்தில் பேசுவதற்குப் போதுமான நேரத்தைச் சபாநாயகர் ஒதுக்குவார் என எதிர்பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

பின்னர், தேர்தலில் வெற்றி பெற்றதற்காக அப்பகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

புதன் 3 ஜன 2018