மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

மீண்டும் மைனாரிட்டி: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

மீண்டும் மைனாரிட்டி: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

வரும் 8ஆம் தேதி சட்டமன்றக் கூட்டத் தொடர் ஆரம்பிக்க உள்ள நிலையில், இன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் 102 எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வரும் 8ஆம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்க உள்ளதால், தொடரில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து விவாதிக்க இன்று முதல்வர் , துணை முதல்வர் ஆகியோர் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. காலை 11 மணியளவில் தொடங்கிய இந்தக் கூட்டத்தில் 102 எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

தினகரன் முதல்முறையாகச் சட்டமன்றம் வரவுள்ள நிலையில், அதனை எதிர்கொள்வது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் தினகரன் தனது கன்னிப்பேச்சை ஆரம்பிக்கும்போது அதிமுக உறுப்பினர்கள் யாரும் கூச்சல், குழப்பத்தில் ஈடுபடக் கூடாது. அரசுக்கு எதிராக தினகரன் விமர்சனம் செய்தாலும் அமைதிகாக்க வேண்டும். அரசு கொறடாவின் உத்தரவை மீறி சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் செயல்படக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை முதல்வர் எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கியுள்ளார்.

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், "கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். சட்டமன்றத்திற்கு தினகரன் வருவது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. நாம் ஒருவர் நமக்கு ஒருவர் என்ற கதைதான் அவர் வருவது. அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது.அரசு சிறப்பாக செயல்பட்டுவருகிறது. அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்படுகிறோம். எனவே ஸ்டாலின், தினகரன் என யார் நினைத்தாலும் அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க முடியாது” என்றார்.

கூட்டத்தில் கலந்துகொள்ளாதவர்கள் குறித்தும் அமைச்சர் தெரிவித்தார். “செல்லூர் ராஜு, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு, பூம்புகார் பவுன்ராஜ் ஆகியோர் சபரி மலைக்குச் சென்றுள்ளனர். அமைச்சர் கடம்பூர் ராஜு, பாஸ்கர் ஆகியோர் வேலுநாச்சியார் சிலைக்கு மரியாதை செலுத்த அரசு விழாவுக்குச் சென்றுள்ளனர். இதனால் அவர்களால் கலந்துகொள்ள முடியவில்லை” என்றார்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

புதன் 3 ஜன 2018