மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

வருகிறது 'நமது அம்மா!’

வருகிறது 'நமது அம்மா!’

அதிமுகவின் அதிகார பூர்வ பத்திரிகையான நமது எம்.ஜி.ஆர். இப்போது டிடிவி தினகரன் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், முதல்வர் எடப்பாடி தலைமையில் இன்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கட்சிக்கு புதிய நாளிதழ் தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. வரும் 17ஆம் தேதி முதல் இந்தப் பத்திரிகை வெளி வர இருக்கிறது.

நமது எம்.ஜி.ஆர். போலவே இந்த நாளிதழுக்கு நமது அம்மா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் ஆசிரியராக இருந்து தினகரனால் சமீபத்தில் நீக்கப்பட்ட மருது அழகுராஜ் நமது அம்மா பத்திரிகையின் ஆசிரியராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஏற்கனவே பாஜகவைக் கடுமையாக எதிர்த்துக் கவிதை எழுதியதால் தினகரனால் நீக்கப்பட்டார் மருது அழகுராஜ். அவரை இப்போது நமது அம்மா நாளிதழின் ஆசிரியர் ஆக்கியதன் மூலம் முதல்வர் எடப்பாடி பாஜக எதிர்ப்பைத் தொடங்க நினைக்கிறாரா என்று மருது அழகுராஜிடமே கேட்டோம்.

“எந்த பாஜகவை நான் எதிர்த்தேனோ அதற்காக என்னைத் தூக்கி எறிந்தார் தினகரன். ஆனால் இப்போது என்னை ஆளாக்கிய இயக்கம் எனக்கு இந்த பொறுப்பைக் கொடுத்திருக்கிறது. பத்திரிகைக்கும் ஆசிரியர் ஆக்கி, செய்தித் தொடர்பாளராகவும் என்னை ஆக்குகிறது என்றால் பாஜகவை உண்மையாக எதிர்ப்பது யார்?’’ என்று கேட்டார் மருது அழகுராஜ்.

மேலும் மருது அழகுராஜ், முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன், கோகுல இந்திரா உள்ளிட்ட 12 செய்தித் தொடர்பாளர்களும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

புதன் 3 ஜன 2018