மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

அஜித்-யுவன்: கூட்டணியில் சிக்கல்?

அஜித்-யுவன்: கூட்டணியில் சிக்கல்?

அஜித், சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் `விஸ்வாசம்’ படத்தில் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா இணைந்திருப்பதாகத் தகவல் வெளியானது. தற்போது படத்திலிருந்து யுவன் விலகியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அஜித், சிவா கூட்டணியில் வெளியான ‘வீரம்’, ‘வேதாளம்’ படங்கள் ஹிட்டானது. இந்தப் படங்களைத் தொடர்ந்து அதே கூட்டணியில் அடுத்ததாக வெளியான ‘விவேகம்’ படம் கலவையான விமர்சனத்தைச் சந்தித்து, வெற்றிப் படமாக அமையவில்லை. இந்நிலையில், நான்காவது முறையாக சிவா இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்க இருக்கிறார். `விஸ்வாசம்' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை `விவேகம்' படத்தைத் தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.

இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாகக் கூறப்பட்ட நிலையில், யுவன் விலகியிருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே இதில் இசையமைக்க அனிருத், சாம்.சி.எஸ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருவதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் 15ஆம் தேதிக்கு மேல் தொடங்க இருக்கிறது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

புதன் 3 ஜன 2018