மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

டாக்ஸி ஓட்டுநர்கள் போராட்டம்!

டாக்ஸி ஓட்டுநர்கள் போராட்டம்!

வாடிக்கையாளர்கள் தரும் பணத்தில் பெருமளவு தொகையை கால் டாக்ஸி நிறுவனங்களே எடுத்துக்கொள்வதால் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி இன்று (டிசம்பர் 3) சென்னை கால் டாக்ஸி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

சிறு முதலாளிகளின் கைகளிலிருந்த கால் டாக்ஸி தொழில் தற்போது கார்ப்பரேட் நிறுவனங்களில் கைக்குச் சென்றுவிட்டதால் வேறு வழியின்றி கால் டாக்ஸி ஓட்டுநர்கள் அவர்களிடம் பணிக்குச் சேரும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிவருகின்றனர். இதனைப் பயன்படுத்திக்கொள்ளும் கார்ப்பரேட் நிறுவனங்கள், வாடிக்கையாளர் தரும் பணத்திலிருந்து 27 சதவீதம் கமிஷனாக எடுத்துக்கொள்வதாகக் கூறப்படுகிறது. இதனால் கால் டாக்ஸி ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்படுவதாகக் கூறியும், கடன் சுமை தாங்க முடியாமல் 3 கால்டாக்ஸி ஓட்டுநர்கள் தற்கொலை செய்துகொண்டதற்கு நியாயம் கேட்டும் வகையிலும் சென்னை கால் டாக்ஸி ஓட்டுநர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

"ஃபாஸ்ட் டிராக் நிறுவனம் தற்போது கிலோமீட்டருக்கு ரூ.18 வசூலித்துவருகிறது. ஆனால் ஓலா நிறுவனமோ வாடிக்கையாளர்களிடம் கிலோமீட்டருக்கு ரூ.12 வசூலித்து, மீதத் தொகையை (ரூ.6) அந்நிறுவனமே டாக்ஸி ஓட்டுநர்களுக்கு வழங்கிவந்தது. ஆனால் அந்நிறுவனம் பிரபலமானவுடன், கமிஷன் தொகையைக் குறைத்துவிட்டது. மேலும் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்பத் தொகையை நிர்ணயம் செய்துகொள்கிறார்கள். சில சமயம் டீசல் செலவை விடக் குறைவான தொகையே எங்களுக்குக் கிடைக்கிறது" என சென்னையைச் சேர்ந்த டாக்ஸி ஓட்டுநர் கருப்பன் அம்பலம் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

புதன் 3 ஜன 2018