இந்தியாவில் வரி செலுத்தும் கோடீஸ்வரர்கள்!

இந்தியாவில் வரி செலுத்தும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 54 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக வருவாய்த் துறை தெரிவித்துள்ளது.
பொருளாதாரம் வேகமாக வளர்ந்துவரும் நிலையில், பணக்காரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் வரி செலுத்தும் மக்களின் எண்ணிக்கை 54 சதவிகிதம் வரையில் அதிகரித்துள்ளதாக வருவாய்த் துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் மக்களின் எண்ணிக்கை 2012-13ஆம் ஆண்டில் 37,248 ஆகவும், 2015-16 ஆண்டில் 57,399 ஆகவும் உயர்த்துள்ளது.
இது குறித்த இதர விவரங்கள் வருமாறு:
ரூ.100 கோடி முதல் ரூ.500 கோடி வரை வருமானம் பெறுபவர்கள்: 30
ரூ.50 கோடி முதல் ரூ.100 கோடி வரை வருவாய் பெறுபவர்கள்: 58
ரூ.25கோடி முதல் ரூ.50 கோடி வரை வருவாய் பெறுபவர்கள்: 229
ரூ.10 கோடி முதல் ரூ.25 கோடி வரை வருமானம் பெறுபவர்கள்: 1135
ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை வருமானம் பெறுபவர்கள்: 2,968