மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

பாகிஸ்தானைப் பாராட்டும் சீனா!

பாகிஸ்தானைப் பாராட்டும்  சீனா!

பாகிஸ்தானை மையமாக வைத்து உலக அரங்கில் அமெரிக்காவும் சீனாவும் மறைமுகமாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதை இந்தியாவும் உன்னிப்பாக கவனித்துவருகிறது.

கடந்த திங்கள் கிழமையன்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்விட்டர் பதிவில், ‘’அமெரிக்கா கடந்த 15 ஆண்டுகளாக 33 பில்லியன் டாலர்களை முட்டாள் தனமாக பாகிஸ்தானுக்குக் கொடுத்து வந்திருக்கிறது. அமெரிக்கா கொடுத்த இந்த உதவியை வைத்து நாம் யாரை எதிர்த்து ஆப்கானிஸ்தானில் வேட்டையாடி வருகிறோமோ அந்தத் தீவிரவாதிகளுக்கு உதவி செய்து வந்திருக்கிறது பாகிஸ்தான். அந்நாடு தீவிரவாதிகளின் சொர்க்கமாக இருக்கிறது. அமெரிக்க தலைவர்களை முட்டாள்களாக்கி அமெரிக்க உதவியை தீவிரவாதத்தை வளர்க்கவே பயன்படுத்தியிருக்கிறது’’ என்று கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார்.

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்து வந்த உதவியை ட்ரம்ப் நிறுத்தியதை இந்தியாவும் வரவேற்றிருந்தது.

இந்நிலையில் அமெரிக்க அதிபரின் இந்த கருத்து பற்றி நேற்று சீன தலைநகர் பீஜிங்கில் கருத்து வெளியிட்ட சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங், “தீவிரவாதத்தை எதிர்ப்பதில் பாகிஸ்தான் அபாரமான முயற்சிகளையும் அதற்காகப் பல தியாகங்களையும் செய்துள்ளது. மேலும் உலகத்தின் தீவிரவாத எதிர்ப்புக்கு பாகிஸ்தான் மிகச் சிறந்த பங்காற்றிவருகிறது. சர்வதேச சமூகம் இதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்’’ என்று கருத்து தெரிவித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

மேலும், ஆசிய பிராந்தியத்தின் அமைதி, நிலைப்புத் தன்மை ஆகியவற்றைக் காப்பாற்றுவது என்ற அடிப்படையில் பாகிஸ்தானுடன் ஒத்துழைப்பதில் சீனா எப்போதுமே ஆர்வமாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கும் சீன செய்தித் தொடர்பாளர், இரு தரப்பு ஆதாயங்களையும் கருத்தில் கொண்டு இரு நாடுகளின் அனைத்து துறை ரீதியான உறவு தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் இந்தியாவுடன் நிரந்தர பகைமை பாராட்டி வரும் நிலையில், சீனாவுடனும் நமக்கு எல்லைப் பிரச்சினைகள் தொடர்கின்றன. இதற்கிடையில் அமெரிக்காவை எதிர்ப்பதான நிலைப்பாட்டில் சீனாவும் பாகிஸ்தானும் முழு அளவில் தங்கள் ஒத்துழைப்பை வெளிப்படையாக அறிவித்திருக்கின்றன.

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

புதன் 3 ஜன 2018