மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

கலகலப்பான ‘பார்ட்டி’!

கலகலப்பான ‘பார்ட்டி’!

இளைஞர்களைக் கவரும் வண்ணம் தன்னுடைய ஒவ்வொரு படங்களையும் எடுத்துவரும் வெங்கட் பிரபு, தனது அடுத்த படமான பார்ட்டியிலும் அதே பாணியைக் கடைப்பிடித்துள்ளார் என்பதை வெளியாகியுள்ள கேரக்டர் டீசரில் அறிய முடிகிறது.

சத்யராஜ், ஜெயராம், நாசர், சம்பத், ஷாம், ஜெய், மிர்ச்சி சிவா, சந்திரன், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் ஆகிய நட்சத்திரங்களோடு பிஜி தீவுகளில் கிட்டத்தட்ட 57 நாள்கள் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்தார் வெங்கட் பிரபு. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பைச் சென்னையில் நடத்திவருகிறார். ஏற்கெனவே நிவேதா பெத்துராஜின் கேரக்டர் டீசர் வெளியாகி படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. இந்த நிலையில் மற்ற நட்சத்திரங்களின் கேரக்டர் டீசர் வெளியாகி மேலும் எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது.

இந்தப் படத்தில் நிவேதா பெத்துராஜ் ‘கல்கி’, மிர்ச்சி சிவா ‘பாப் மெர்லி’, சந்திரன் ‘ரகு’, ரெஜினா ‘மது’, சஞ்சிதா ஷெட்டி ‘அதிதி’, ஜெய் ‘ஜீரோ எரர் சார்லி’ ஆகிய கேரக்டர்களில் நடிக்க இருப்பதாக டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளது. காமெடி, ஆக்ஷன், கிளாமர் எனக் கலவையான விகிதத்தில் உருவாகியிருக்கும் இதில் மூன்று நாயகிகளும் கவர்ச்சியாக நடித்திருக்கின்றனர் என கேரக்டர் டீசரில் அறிய முடிகிறது. இந்த டீசர் வெளியாகி மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றிருக்கிறது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

புதன் 3 ஜன 2018