மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

விசாரணை ஆணையத்தில் சுதா சேஷய்யன் ஆஜர்!

விசாரணை ஆணையத்தில் சுதா சேஷய்யன்  ஆஜர்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடலை எம்பார்மிங் செய்த மருத்துவர் சுதா சேஷய்யன் இன்று (ஜனவரி 3) விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாகப் பல சர்ச்சைகள் எழுந்ததையடுத்து இது தொடர்பாக விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமியின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையத்தின் முன்பு திமுகவைச் சார்ந்த மருத்துவர் சரவணன், அரசு தலைமை மருத்துவர், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அவரது சகோதரர் தீபக், முன்னாள் தலைமை செயலாளர்கள் ராம்மோகன் ராவ், ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆஜராகி விளக்கமளித்தனர்.

நேற்று சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப் பிரியா மற்றும் தினகரன் சார்பாக அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ஆகியோர் ஆஜராகி விளக்கமளித்தனர். அப்போது,ஜெயலலிதா சிகிச்சை வீடியோக்கள் அடங்கிய ஆதாரங்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜெயலலிதா இறந்தபோது அவரது உடல் கெட்டுப் போகாமல் இருக்கும் எம்பார்மிங் முறையில் பதப்படுத்தும் பணியில் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி உடற்கூறு பிரிவு தலைவர் சுதா சேஷய்யன் தலைமையிலான குழு ஈடுபட்டது.

எனவே, ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு நடைபெற்ற சம்பவங்கள் குறித்து விளக்கம் பெற மருத்துவர் சுதா சேஷய்யனுக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது.

அதன்படி, இன்று விசாரணை ஆணையம் முன்பு ஆஜரான அவர் தனது தரப்பு விளக்கங்களை எடுத்துரைத்தார்.

அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர் சத்யபாமா நாளை நேரில் ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

அரசாங்க விழாக்கள் பலவற்றையும் தொகுத்து வழங்கியுள்ள சுதாதான், ஜெயலலிதா கடைசியாக பங்கேற்ற சின்னமலை முதல் விமான நிலையம் வரையிலான 2ஆவது கட்ட மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைக்கும் விழாவையும் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

புதன் 3 ஜன 2018