மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

சென்னையிலும் பரவும் பட்டாசு உற்பத்தியாளர்கள் போராட்டம்!

சென்னையிலும் பரவும் பட்டாசு உற்பத்தியாளர்கள் போராட்டம்!

பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக, சிவகாசியில் இன்று முழு அடைப்புப் போராட்டமும், அனைத்துக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றுவருகின்றன.

நாடு முழுவதும் பட்டாசுக்குத் தடை விதிக்கக் கோரி 2015ஆம் ஆண்டு அர்ஜுன் கோபால் உள்ளிட்ட மூன்று குழந்தைகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தீபாவளி காலத்தின்போது காற்று மாசு அதிகரிப்பதாகக் கூறி பட்டாசுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

பட்டாசுகளுக்குத் தடை விதித்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், இந்த வழக்கைத் திரும்பப் பெறும்படி கோரியும், பட்டாசுக்குச் சுற்றுச்சூழல் விதிகளில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் கடந்த டிசம்பர் 26 முதல் 9 நாட்களாக சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதால் அதனை பேக்கிங் செய்யத் தேவைப்படும் காகித அட்டைப்பெட்டி உற்பத்தி, பட்டாசுக்குத் தேவையான லேபிள்கள் அச்சிடும் பணி ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்துவருகின்றனர்.

பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக இன்று (ஜனவரி 3) சிவகாசியில் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. பெட்ரோல் பங்க், மருந்தகம் ஆகியவற்றைத் தவிர அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. அனைத்துக் கட்சியினரும் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். சிவகாசி பேருந்து நிலையம், விருதுநகர் ஆட்சியர் அலுவலகம், சாட்சியாபுரம் ஆகிய மூன்று இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது. இதில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

புதன் 3 ஜன 2018