மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

வெங்காயம்: குறைந்தபட்ச ஏற்றுமதி விலை!

வெங்காயம்: குறைந்தபட்ச ஏற்றுமதி விலை!

மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள வெங்காயத்துக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையானது ஜனவரி 20ஆம் தேதி வரையில் நடைமுறையில் இருக்கும் என்று அந்நிய வர்த்தகப் பொது இயக்குநரகம் அறிவித்துள்ளது.

உள்நாட்டு விநியோகத்தை அதிகரிக்கவும், சந்தை விலை நிலவரத்தைக் கண்காணிக்கவும், கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசால் வெங்காயத்துக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை டன் ஒன்றுக்கு ரூ.54,098.25 என நிர்ணயம் செய்யப்பட்டது. டிசம்பர் 31ஆம் தேதி வரையில் இதற்கான கால வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், இக்கால அவகாசம் ஜனவரி 20 வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் போதிய விநியோகம் இல்லாமல் வெங்காயத்தின் விலை உயர்ந்து கிலோ ஒன்றுக்கு ரூ.40 முதல் 45 வரை விற்கப்படுகிறது. அதிகளவிலான வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுவதால் உள்நாட்டில் வெங்காயம் விநியோகம் குறைந்தது. ஏப்ரல் - ஜூலை மாதங்களில் மட்டும் இந்தியா 12 லட்சம் டன் அளவிலான வெங்காயத்தை ஏற்றுமதி செய்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 56 சதவிகிதம் கூடுதலாகும்.

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

புதன் 3 ஜன 2018