மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

லாலு தண்டனை: மீண்டும் ஒத்திவைப்பு!

லாலு தண்டனை: மீண்டும் ஒத்திவைப்பு!

கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கான தண்டனை விவரம் வெளியாவது நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் 1991ஆம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டு வரை லாலு பிரசாத் யாதவ் முதல்வராக இருந்த காலகட்டத்தில் கால்நடைகளுக்குத் தீவனங்கள் வாங்கியதில் ரூ.89.27 லட்சம் முறைகேடு நடைபெற்றுள்ளதாகப் புகார் எழுந்தது.

இது தொடர்பாக லாலு மற்றும் அவரது சகாக்கள் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதில் ஒன்றான சாய்பாஷா கருவூலத்தில் 37.5 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில், லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான இந்தத் தீர்ப்பினால், லாலு 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உண்டானது.

இந்த வழக்கின் விசாரணை ராஞ்சி சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு இந்த நிலையில், மீதமுள்ள 4 வழக்குகளிலும் ஒரேவிதமான குற்றம் மற்றும் சாட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியது லாலு தரப்பு. இந்த வழக்குகளை விசாரிக்கத் தடை வேண்டுமென, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் லாலு தரப்பு தடை கேட்டது. இதனையடுத்து, கடந்த 2014ஆம் ஆண்டு கால்நடை தீவன ஊழல் தொடர்பான மீதமுள்ள 4 வழக்குகளையும் விசாரிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து, சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், கால்நடை தீவன ஊழல் தொடர்பான மீதமுள்ள 4 வழக்குகளையும் விசாரிப்பதற்கான தடை நீக்கப்பட்டது. இந்த வழக்கில், கடந்த டிசம்பர் 23இல் தீர்ப்பளித்த நீதிபதி ஷிவ்பால் சிங், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 15 பேரை குற்றவாளிகள் என்று அறிவித்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெகந்நாத் மிஸ்ரா உள்ளிட்ட 7 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, லாலு பிரசாத் யாதவ் ராஞ்சி பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கான தீர்ப்பு விவரம் இன்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், லாலு பிரசாத்தின் வழக்கறிஞர் வின்டேஸ்வரி பிரசாத் உயிரிழந்ததால் தண்டனை விவரம் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

4 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் ...

3 நிமிட வாசிப்பு

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் போக்குவரத்து மாற்றம்!

புதன் 3 ஜன 2018