பகுதி நேர பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்!

பகுதி நேர பொறியியல் படிப்புகளில் சேர இன்று (ஜனவரி 3 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாக கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், குரோம்பேட்டை எம்ஐடி ஆகியவை செயல்படுகின்றன. இந்தக் கல்லூரிகளில் பகுதி நேர பொறியியல் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதில் பட்டப் படிப்புகளில் ஏற்கெனவே பணியில் இருப்பவர்கள் மட்டுமே சேர்க்கை பெற முடியும்.
இந்தப் படிப்புகளில் சேர விரும்புபவர்கள் www.annauniv.edu/bept2018 என்ற இணையதளத்தில் இன்று முதல் பதிவு செய்யலாம்.