மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

மசாலா பொருட்கள் ஏற்றுமதி 24% உயர்வு!

மசாலா பொருட்கள் ஏற்றுமதி 24% உயர்வு!

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில் இந்தியாவின் நறுமணப் பொருட்கள் (மசாலா) ஏற்றுமதியானது அளவு அடிப்படையில் 24 சதவிகிதமும், மதிப்பு அடிப்படையில் 2 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக மசாலா வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் தரம் வாய்ந்த மசாலாப் பொருட்களுக்குச் சர்வதேச நாடுகளிடையே அதிகத் தேவை காணப்படுவதால் ஏப்ரல் - செப்டம்பர் மாதங்களில் ரூ.8,880.53 கோடி மதிப்பில் 5,57,525 டன் அளவிலான மசாலாப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. 2016ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.8,700.15 கோடி மதிப்புக்கு 4,50,700 டன் அளவிலான மசாலாப் பொருட்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன. எனவே அளவு அடிப்படையில் 24 சதவிகிதம் கூடுதலான அளவிலும், மதிப்பு அடிப்படையில் 2 சதவிகிதம் கூடுதலான அளவில் மசாலாப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. டாலர் மதிப்பிலான ஏற்றுமதியானது 299.96 மில்லியன் டாலரிலிருந்து 1,373.97 மில்லியன் டாலராக (6%) உயர்ந்துள்ளது.

மசாலாப் பொருட்களிலேயே அதிகபட்சமாக மிளகாய் ரூ.2,125.90 கோடி மதிப்புக்கு 2,35,000 டன்கள் அளவுக்கு ஏற்றுமதியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து, சீரகம் ரூ.1,324.58 கோடிக்கும், மஞ்சள் ரூ.547.67 கோடிக்கும் ஏற்றுமதியாகியுள்ளன. பூண்டு, புளி, கடுகு, கசகசா, வெந்தயம் உள்ளிட்ட பொருட்களுக்கான ஏற்றுமதியும் கணிசமான அளவு உயர்ந்துள்ளதாக மசாலா வாரியம் தெரிவித்துள்ளது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 3 ஜன 2018