மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

கருணாநிதி - அழகிரி சந்திப்பு!

கருணாநிதி - அழகிரி சந்திப்பு!

திமுக தலைவர் கருணாநிதியை, அவரது மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி சந்தித்து நலம் விசாரித்தார்.

ரசிகர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வரப்போவது உறுதி. வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம். சாதி, மதச் சார்ப்பற்ற ஆன்மிக அரசியலே தனது நோக்கம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் இன்று (ஜனவரி 3) மரியாதை நிமித்தமாக சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்திக்கவுள்ளார். இன்று மாலை நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் அரசியல் எதுவுமில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ரஜினியின் சந்திப்புக்கு முன்னதாக இன்று( ஜனவரி 3) திமுக தலைவர் கருணாநிதியை, அழகிரி சந்தித்து நலம் விசாரித்தார். புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க சந்தித்ததாக கூறப்படுகிறது. சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அழகிரி, திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார். ரஜினியைச் சந்திக்க நேரம் கிடைக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

புதன் 3 ஜன 2018