மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

புதுமையான நோட் புக்!

புதுமையான நோட் புக்!

ஹாங்காங் நாட்டினை சேர்ந்த இன்ஃபோ பில்லியன் டெக்னாலஜி என்ற நிறுவனம் புதிய ஸ்மார்ட் நோட் புக் என்ற ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

IDNbook என்ற இந்த புதிய ஸ்மார்ட்புக் பயனர்களின் எழுத்துக்களை டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்துகொள்ள உதவுகிறது. அதன்படி பயனர்கள் எழுதும் எழுத்துக்கள் மட்டுமின்றி அவர்களின் வரைபடம் போன்றவற்றினையும் இந்த ஸ்மார்ட் புக் மூலம் பயனர்கள் சேமித்து வைத்துக்கொள்ள இயலும். இந்த ஸ்மார்ட்புக் உடன் ஸ்மார்ட் பென் வழங்கப்படும்.

இந்த ஸ்மார்ட் புக் மூலம் பயனர்கள் தகவல்களை இணையத்தில் சேமித்து வைத்துக்கொள்வது மட்டுமின்றி தேவையான நபர்களுக்கு அனுப்பவும் முடியும். அதேபோல் தகவல்கள் சேமிக்கப்பட்ட பின்னர் அதில் தேவையான மாற்றங்களைச் செய்துகொள்ளலாம். இதன் விலை ரூ.12,000 என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்புக் ஆனது வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் என பல்வேறு அப்ளிகேஷன்களைப் பயன்படுத்த உதவுகிறது.

இந்த புதிய ஸ்மார்ட் புக் தகவல்களைச் சேமித்துவைத்துப் பயன்படுத்தும் வகையில் உள்ளதால் பல்வேறு பயனர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

புதன் 3 ஜன 2018