கார்ப்பரேட் கடனை ரத்து செய்யவில்லை!

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசானது கார்ப்பரேட் கடன்கள் எதையும் ரத்து செய்யவில்லை எனவும், அவ்வாறு ரத்து செய்ததாகப் பரவும் செய்திகள் யாவும் வதந்திகள் எனவும் அருண் ஜேட்லி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி ஆட்சிக் காலத்தில் ரூ.55,000 கோடி அளவிலான கார்ப்பரேட் கடனை ரத்து செய்துள்ளதாக ஜனவரி 1ஆம் தேதி மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதியமைச்சரான அருண் ஜேட்லி பதிலளிக்கையில், “மத்திய அரசோ, இந்திய வங்கிகளோ கார்ப்பரேட் கடன் எதையும் ரத்து செய்யவில்லை. வங்கிக் கடன்கள் நான்கு ஆண்டுகளுக்கு மேலாகவும், வசூலிக்கப்படாமல் அதற்கான சாத்தியங்கள் குறையும் பட்சத்தில் அக்கடன்களின் வகை மட்டுமே மாற்றம் செய்யப்படுகிறது. ஆனால், அக்கடனைப் பெற்ற கடனாளி அத்தொகையைத் திருப்பிச் செலுத்தியே ஆக வேண்டும்.
2015ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கியால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதற்கு முன்னர் (முந்தைய ஆட்சியில்) வங்கிகள் அதிகளவில் கடன்களை வாரி வழங்கியுள்ளதாகவும், வாராக் கடனை வசூலிக்கப் போதிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் கண்டறியப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.