மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

தாஜ்மகாலைப் பார்வையிடக் கட்டுப்பாடு!

தாஜ்மகாலைப் பார்வையிடக் கட்டுப்பாடு!

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை பார்வையிடச் சுற்றுலாப் பயணிகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

உலகப் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாஜ்மகால் காதலின் சின்னமாகப் பார்க்கப்படுகிறது. ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மகாலை உலகெங்கிலுமிருந்து லட்சக்கணக்கான மக்கள் வந்து பார்வையிட்டுச் செல்கிறார்கள்.

பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட தாஜ்மகால் ஏற்கனவே காற்று மாசு காரணமாக மஞ்சள் நிறமாக மாறிவிட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன. தற்போது சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதனால் தாஜ்மகாலுக்கு மேலும் பாதிப்பு ஏற்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக தாஜ்மகாலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையைக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி நாளொன்றுக்கு 40 ஆயிரம் சுற்றுலா பயணிகள் மட்டுமே தாஜ்மகாலைப் பார்க்க அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அனுமதி கேட்டு உத்தரப் பிரேதச மாநில அரசின் மத்திய கலாச்சார அமைச்சகத்திற்கு இந்தியாவின் தொல்பொருள் ஆய்வுத் துறை கடிதம் அனுப்பியுள்ளது. இந்தத் திட்டம் வரும் 20ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

இது தவிர தாஜ்மகாலைப் பார்வையிடுவதற்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு ரூ.50, பெரியவர்களுக்கு ரூ.100, வெளி நாட்டவர்களுக்கு ரூ.1000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெளிநாட்டுப் பயணிகளுக்கு எந்த வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஷாஜகான், மும்தாஜ் கல்லறையைப் பார்க்கத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

புதன் 3 ஜன 2018