மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

பன்னாட்டு நாத்திகர் மாநாடு!

பன்னாட்டு நாத்திகர் மாநாடு!

ஆன்மிக அரசியல் என்று ரஜினி புதிதாக ஒரு முழக்கத்தை முன்வைக்க, அதுபற்றி விவாதங்கள் வெடித்துவரும் நிலையில் திருச்சியில் பன்னாட்டு நாத்திகர் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது திராவிடர் கழகம்.

வரும் 5,6,7ஆகிய மூன்று நாட்களில் திருச்சியில் பன்னாட்டு நாத்திகர் மாநாடு நடைபெற இருக்கிறது. இதுபற்றி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில்,

”திராவிடர் கழகம் - பகுத்தறிவாளர் கழகம் - ஆந்திராவில் உள்ள கோரா நாத்திகர் மய்யம் ஆகியவை இணைந்து நடத்தும் பன்னாட்டு மாநாட்டில், நாத்திகர்களும், பகுத்தறிவாளர்களும், சுதந்திரச் சிந்தனையாளர்களும், மனிதநேயப் மாண்பாளர்களும், அமைப்புகளின் பேராளர்களும் ஏராளம் கலந்துகொண்டு பல்வேறு தலைப்புகளில் ஆய்வுரைகளை ஆழமான விவாதங்களை நடத்தவிருக்கிறார்கள்!

நாம் இதே திருச்சியில் 2011இல் இத்தகைய பன்னாட்டு நாத்திகர் (உலக) மாநாட்டினை நடத்தியுள்ளோம். அமெரிக்கா, இங்கிலாந்து, நார்வே முதலிய ஐரோப்பிய நாடுகளிலிருந்தும், அனைத்திந்தியாவின் பற்பல மாநிலங்களிலிருந்தும் பல பேராளர்களும், சிந்தனையாளர்களும், கல்வியாளர்களும், பேராசிரியர்களும், எழுத்தாளர்களும், கருத்தாளர்களும் கலந்துகொண்டதுபோலவே, இம்மாநாட்டிலும் பங்கேற்று ஒப்பற்ற கருத்துக் கருவூலங்களை இன்றைய தலைமுறைக்கும், இளைய சமுதாயத்தினருக்கும் ஏராளம் வழங்க ஏற்பாடாகியுள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாநாட்டில் புதிய நூல்கள் - ஆங்கில வெளியீடுகள், தமிழ் வெளியீடுகள் வெளியிடும் நிகழ்ச்சியும் சிறப்பு நிகழ்வாக நடைபெறவிருக்கிறது என்றும் International Humanist and Ethical Union (IHEU) தலைவர் மற்றும் பொறுப்பாளர்களும், ஆந்திர நாத்திகர்களும் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களி லிருந்து வரும் பல்வேறு பகுத்தறிவாளர்களும், மனிதநேய, நாத்திக, சமூக சேவை அமைப்புகளின் பிரதிநிதிகளும் மகிழ்ச்சியுடன் பங்கேற்க இசைவு தந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார் வீரமணி.

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

புதன் 3 ஜன 2018