மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து!

ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து!

மதுரையில் உள்ள ஜவுளிக்கடையில் இன்று (ஜனவரி 3) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ. 3 கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து சாம்பலாயின.

மதுரை மாவட்டத்தின் முக்கியப் பகுதி விளக்குத்தூண். இந்தப் பகுதியில் ஜவுளிக்கடைகள் மற்றும் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டுவருவதால் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும். இந்தப் பகுதியில் கணேசன் என்பவர் ஜே.ஆர்.கே. என்ற ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்தக் கடையில் கீழ்ப் பகுதியில் விற்பனையகமும் மாடியில் கிடங்கும் செயல்பட்டுவருகிறது.

சுமார் ரூ. 3 கோடி மதிப்பிலான ஜவுளி ரகங்கள் கடையில் இருந்ததாகத் தெரிகிறது. நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் கணேசன் மற்றும் ஊழியர்கள் வழக்கம் போல் கடையை பூட்டிச் சென்றனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு இந்தக் கடையின் மாடியில் திடீரென்று தீப்பிடித்தது. இதுகுறித்து அப்பகுதியில் உள்ளவர்கள் கணேசனுக்கு தகவல் தெரிவித்தனர். தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர்.

குறுகலான இடத்தில் கடை இருந்ததால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதற்கிடையில் கடையின் மேல் பகுதியில் எரிந்த தீ மளமளவெனக் கீழ் பகுதிக்கும் பரவியது. 3 தீயணைப்பு நிலைய வீரர்கள் இணைந்து இந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 6 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு காலை 9.30 மணியளவில் தீ அணைக்கப்பட்டது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 3 ஜன 2018