மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

மதுரை விமான நிலையம் பெயர் மாற்றப்படுமா?

மதுரை விமான நிலையம் பெயர் மாற்றப்படுமா?

மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரைச் சூட்டுவது தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி எம்.பி. நேற்று மாநிலங்களவையில் குரல் எழுப்பினார்.

மாநிலங்களவையில் நேற்று டிசம்பர் 2 கேள்வி நேரத்தின்போது சுப்பிரமணியன் சுவாமி, “முத்துராமலிங்கத் தேவர் மிகப்பெரிய சுதந்திர போராட்ட வீரர். சுபாஷ் சந்திர போஸுடன் இருந்தார் என்பதால் அவர் புறக்கணிக்கப்படுகிறார். மதுரை விமான நிலையத்துக்குப் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் விமான நிலையம் என்று பெயர் மாற்றப்பட வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்திவருகிறேன். ஆனால் இது கிடப்பில் போடப்படுகிறது. தற்போது தமிழகத்தில் புதிய அரசு இருப்பதால் இந்த விவகாரத்தை மத்திய அமைச்சர் மீண்டும் மாநில அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வாரா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு பதில் அளித்துப் பேசுகையில், “விமான நிலையங்களின் பெயரை மாற்றுவது தொடர்பாக மாநில சட்டப் பேரவைகளில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அதன் பரிந்துரையின் அடிப்படையில்தான் விமான நிலையங்களின் பெயர் மாற்றப்படுகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், தமிழக அரசு 2001, 2005 ஆகிய ஆண்டுகளில் ஓர் உத்தரவை வெளியிட்டிருந்தது. அதில், மாநிலத்தில் உள்ள அரசுக் கட்டடங்கள், இடங்கள் அல்லது மாநகராட்சிகளுக்கு அரசியல் தலைவர்களின் பெயர்கள் வைக்கப்பட மாட்டாது எனக் கூறப்பட்டிருந்தது. தற்போதுள்ள அரசு இது தொடர்பாக முன்மொழிவு அனுப்பினால், அதற்கு மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவிக்காது. தேவர் மீது நாங்கள் மிகவும் மதிப்பு வைத்துள்ளோம்” என்று விளக்கமளித்தார்.

விமான நிலையத்தின் பெயரை மாற்றும் விவகாரம் தொடர்பாக 9 முன்மொழிவுகளை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் பரிசீலித்துவருகிறது என்றூம் கஜபதி ராஜு தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய மாநிலங்களவை சபாநாயகர் வெங்கையா நாயுடு, “பசும்பொன் முத்துராமலிங்கம் என்ற பெயர் தென்னிந்தியாவில் புரட்சிகரமான பெயர்களில் ஒன்று. சுபாஷ் சந்திரபோஸுடன் இணைந்து அவர் நாட்டுக்கு அளித்துள்ள பங்களிப்பு குறித்து அனைவருக்குமே ஒன்றுபட்ட கருத்து உண்டு” என்று குறிப்பிட்டார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

புதன் 3 ஜன 2018