மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

முதல் டெஸ்ட்: ஸ்டெய்ன் விலகல்!

முதல் டெஸ்ட்: ஸ்டெய்ன் விலகல்!

இந்திய, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே வருகிற வெள்ளிக்கிழமை (ஜனவரி 5) தொடங்க உள்ள முதல் டெஸ்ட் போட்டியில் டேல் ஸ்டெய்ன் பங்கேற்க மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட உள்ளது. இந்திய அணி தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களை வெற்றிபெற்று வலுவான நிலையில் உள்ளது. தென்னாப்பிரிக்க அணியும் டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்திவருகிறது.

இந்திய அணி 1992ஆம் ஆண்டு முதல் இதுவரை தென்னாப்பிரிக்காவில் பங்கேற்ற ஒரு தொடரிலும் வெற்றிபெற்றதில்லை. ஆனால் தற்போது வலுவான நிலையில் உள்ள இந்திய அணி வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது.

தென்னாப்பிரிக்க அணியும், இந்திய அணிக்குக் கடும் சவால் கொடுக்கும் விதமாக டேல் ஸ்டெய்ன், ஏபி டிவிலியர்ஸ் இருவரையும் அணிக்குத் திரும்ப அழைத்தது. இருவரும் ஜிம்பாவே தொடருக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பங்கேற்றனர்.

ஆனால் உடல்நலக் குறைவு காரணமாக ஸ்டெய்ன் அந்தப் போட்டியிலிருந்து விலகினார்.

இந்நிலையில் இந்தியாவுடனான முதல் போட்டியிலும் அவர் பங்கேற்க மாட்டார் என தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் ஓட்டிஸ் கிப்ஷன் தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

புதன் 3 ஜன 2018