மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

நீண்டகால சிறைவாசிகளுக்கு விடுதலை: திருமா கோரிக்கை!

நீண்டகால சிறைவாசிகளுக்கு விடுதலை: திருமா கோரிக்கை!

‘தமிழ்நாட்டுச் சிறைகளில் நீண்டகாலமாக உள்ள சிறைவாசிகளை எம்.ஜி.ஆர் நூற்றாண்டை முன்னிட்டு விடுதலை செய்ய வேண்டும்’ என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று (ஜனவரி 2) வெளியிட்டுள்ள அறிக்கையில், “எம்.ஜி.ஆர் நூற்றாண்டையொட்டித் தமிழ்நாட்டில் பத்தாண்டுகளுக்கு மேல் சிறைகளில் உள்ள தண்டனைக் கைதிகளை விடுவிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதை வரவேற்கிறோம்.

அத்துடன், குறிப்பிட்ட சில வழக்குகளைச் சார்ந்த தண்டனைக் கைதிகளை மட்டுமின்றி, நீண்டகாலமாகச் சிறையில் உள்ள அனைவரையும் விடுதலை செய்ய கருணை காட்ட வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளின் புள்ளிவிவரங்களின்படி முஸ்லிம்களும் தலித்துகளும்தான் அதிக அளவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், 2015ஆம் ஆண்டு புள்ளிவிவரத்தின்படி தமிழ்நாட்டில் உள்ள தண்டனை சிறைவாசிகளில் 17 விழுக்காட்டினர் முஸ்லிம்கள் என்பது தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “தமிழ்நாட்டில் நீண்ட நாள்களாக சிறையில் இருப்பவர்களைப் புத்தாண்டிலும், தலைவர்களின் பிறந்த நாட்களின்போதும் நன்னடத்தையின் அடிப்படையில் தண்டனைக் குறைப்பு செய்து விடுவித்து வந்தனர். கடந்த 2006, 2007 மற்றும் 200 ஆம் ஆண்டுகளில் தி.மு.க ஆட்சியின்போது அவ்வாறு ஆயுள் தண்டனை சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டனர்” என்று மேற்கோள் காட்டியுள்ள அவர், “2011இல் அதிமுக அரசு பதவியேற்றபின் தண்டனைக் குறைப்பு செய்து ஆயுள் சிறைவாசிகள் எவரும் விடுதலை செய்யப்படவில்லை” என வேதனைத் தெரிவித்துள்ளார்

தற்போது எம்.ஜி.ஆர் நூற்றாண்டை முன்னிட்டு தமிழக அரசு கைதிகளை விடுவிக்க முன்வந்திருப்பதற்குப் பாராட்டு தெரிவித்துள்ள அவர், “ஒரு அரசின் பெருமை சட்டத்தைப் பயன்படுத்தி தண்டிப்பதில் மட்டும் இல்லை, அது கருணையை வெளிப்படுத்துவதிலும் அடங்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

எனவே, “25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் இதர வழக்கில் உள்ள இஸ்லாமியர்களையும் விடுதலைச் செய்ய பரிவுக்காட்ட வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ள அவர், அவ்வாறு விடுதலை செய்தால் எம்.ஜி.ஆருக்கு மேலும் பெருமை சேர்க்கும் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

புதன் 3 ஜன 2018