மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

அரசு மருத்துவமனை சேவைகள்: விளம்பரம்!

அரசு மருத்துவமனை சேவைகள்: விளம்பரம்!

சென்னையில் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சேவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பரப்படுத்தச் சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்த 48 மருத்துவமனைகள், 29 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 11,203 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.

இதில் பொது மருத்துவம், சிறுநீரகம், இதயம், காது, மூக்கு, தொண்டைத் தொடர்பான பிரச்சனைகள், புற்றுநோய், எலும்பு நோய்கள், கல்லீரல், சர்க்கரைநோய், பாலியல் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் மனநல பிரச்சனைகள் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அறுவை சிகிச்சைக்கு தனித்தனி பிரிவுகள் அமைக்கப்பட்டு, இதற்கு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களும் அரசு மருத்துவமனையில் உள்ளனர். அரசு மருத்துவமனைகளில் போதுமான வசதிகள் இருந்தாலும் நடுத்தர மக்கள் தனியார் மருத்துவமனைகளையே நாடிச் செல்கின்றனர். அங்குச் சிகிச்சைக்கு அதிக கட்டணம் செலுத்திப் பாதிக்கப்படுகின்றனர்.

நோயாளிகள் மீதான அக்கறையின்மை மற்றும் சுகாதாரமின்மை போன்ற காரணங்களால் நடுத்தர மக்கள் அரசு மருத்துவமனைகளுக்குச் செல்வதில்லை. மேலும் சில அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்குக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பணம் தராவிட்டால் சிகிச்சை அளிக்கவும் மறுக்கப்படுகிறது. அதேபோல், நோயாளிகள் அவசரக் காலங்களில் இருக்கும் போது பெரும்பாலான மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு மக்களிடத்தில் உள்ளது.

இந்தக் குறைகளை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சேவைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. அரசியல்வாதிகள் முதல் அரசு அதிகாரிகள் வரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும். அப்போது தான் மக்களுக்கும் அரசு மருத்துவமனையின் மேல் நம்பிக்கை ஏற்படும்.

அரசு மருத்துவமனைகளில் இதய சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை போன்ற அனைத்து உயர்தர சிகிச்சைக்கும், அதிநவீன மருத்துவ சாதனங்கள் இருக்கின்றன. பிரபல தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் கைவிடப்பட்ட நோயாளிகளை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். ஆசியா அளவில் அறுவை சிகிச்சையில் பல புதிய சாதனைகளையும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் படைத்துள்ளனர்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

புதன் 3 ஜன 2018