மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

பிட்காயின் சட்டபூர்வமானது அல்ல!

பிட்காயின் சட்டபூர்வமானது அல்ல!

பிட்காயின் குறித்து திமுக எம்.பி கனிமொழியின் கேள்விக்குப் பதிலளித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பிட்காயின், கிரிப்டோ நாணயங்களுக்கு இந்தியாவில் சட்டபூர்வமான அனுமதி இல்லை என்று கூறியுள்ளார்.

பிட்காயின், எதிரியம் ஆகியவை கண்ணுக்குத் தெரியாமல் மின்னணு முறையில் நடைபெறும் ரகசிய நாணயப் பரிமாற்றங்கள் ஆகும். சமீபகாலமாக இவ்வகை நாணயங்களின் பயன்பாடு உலக அளவில் அதிகரித்துள்ளது. இவ்வகை பரிமாற்றங்கள் எந்த நாடுகளிலும் அங்கீகரிக்கப்படவில்லை.

இந்த நிலையில் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நேற்றைய (ஜனவரி 2) கேள்வி நேரத்தின்போது திமுக எம்.பி கனிமொழி, “பிட்காயின், எதிரியம் போன்ற கிரிப்டோ வகை நாணயப் பரிமாற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறதா?” என்ற கேள்வியை எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அருண் ஜேட்லி, “இந்தியாவில் பிட்காயின் மற்றும் கிரிப்டோ நாணயங்களுக்குச் சட்டபூர்வமாக அனுமதி இல்லை. இவ்வகை பரிவர்த்தனைகளில் ஈடுபடுபவர்கள் தங்களின் சொந்த முயற்சியிலேயே ஈடுபடுகின்றனர். அரசு இந்த விவகாரம் குறித்து பரிசீலித்து வருகிறது” என்று குறிப்பிட்ட அவர், “எதிர்காலத்தில் இந்த விவகாரத்தை எப்படிக் கையாளுவது என்பதை ஆராய்வதற்காக, பொருளாதார விவகாரங்கள் துறையின் கீழ் ஒரு பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை இன்னும் தயாராகவில்லை” என்றும் தெரிவித்தார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

புதன் 3 ஜன 2018