மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

அந்த 37 பேர்!

அந்த 37 பேர்!

இந்த ஆண்டுக்கான சட்டமன்றக் கூட்டத் தொடர் வரும் 8ஆம் தேதி ஆளுநர் உரையுடன் ஆரம்பிக்க உள்ள நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்களின் கூட்டம் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று முதல்வர் தலைமையில் நடைபெறவுள்ளது.

ஆர்.கே.நகரில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற தினகரன், முதன்முறையாக சட்டமன்றத்தில் நுழைய உள்ளார். தான் பேசும்போதெல்லாம் எடப்பாடி அணியில் தனது ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர் என்றும், உரிய நேரத்தில் அவர்கள் வெளிவருவார்கள் என்றும் குறிப்பிட்டு வருகிறார். நேற்று அவர் அளித்த பேட்டியில், “சட்டமன்றத்தில் ஆர்.கே.நகர் தொகுதி பிரச்னை பற்றி மட்டும் கேள்வி எழுப்பாமல் அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் கேள்வி எழுப்புவேன்” என்று கூறியுள்ளார்.

அதாவது சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை திமுக தரப்பு மட்டும்தான் கொண்டுவர வேண்டும் என்பதில்லை, ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அதிமுக அரசின் மீது தினகரனும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரலாம். இதனால் தினகரன் சட்டமன்றத்தில் எடப்பாடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரலாம் என்று கூறப்படுகிறது.

வழக்கமாக விசேஷ தினங்களில் முக்கியத் தலைவர்களைச் சந்தித்து எம்.எல்.ஏ.க்கள் பலரும் வாழ்த்துத் தெரிவிப்பது தமிழக அரசியலில் வழக்கமாக உள்ள நிலையில், புத்தாண்டு அன்று முதல்வரை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் யாரும் சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுக்குப் பிறகு உளவுத்துறை சில தகவல்களை முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளது. அதன்படி, கொங்கு பகுதியில் இரு அமைச்சர்கள், மத்திய மாவட்டத்தில் ஓர் அமைச்சர், வடமாவட்டத்திலிருந்து இரு அமைச்சர்கள் தென்மாவட்டங்களில் நான்கு அமைச்சர்கள் என 15 அமைச்சர்களும், 22 எம்.எல்.ஏ.க்களும் தினகரனுடன் தொடர்பில் இருப்பதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

புதன் 3 ஜன 2018