மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

லாலு வழக்கு: தண்டனை விவரம் இன்று அறிவிப்பு!

லாலு வழக்கு: தண்டனை விவரம் இன்று அறிவிப்பு!

கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் உட்பட 15 பேரைக் குற்றவாளிகள் என அறிவித்துத் தீர்ப்பு வழங்கியது ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம். அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை விவரங்கள் இன்று (ஜனவரி 3) அறிவிக்கப்படவுள்ளது.

பீகார் மாநில முதலமைச்சராக லாலு பிரசாத் யாதவ் பதவியிலிருந்த 1991-96 காலகட்டத்தில், கால்நடை தீவனம் வாங்குவதில் ஊழல் நடந்ததாகப் புகார் எழுந்தது. இதுபற்றி பாஜக சார்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு, லாலு மீது ஐந்து வழக்குகள் பதிவானது. சாய்பாஷா கருவூலத்தில் 37.5 கோடி ரூபாய் மோசடி செய்த முதல் வழக்கில், கடந்த 2013ஆம் ஆண்டு லாலுவுக்கு ஐந்து ஆண்டுகால சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதனால், அவர் 11 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தார். இந்த வழக்கில் லாலு ஜாமீன் பெற்றார்.

டிசம்பர் 23ஆம் தேதியன்று, தியோஹர் மாவட்ட கருவூலத்தில் ரூ.89.27 லட்சம் மோசடி செய்த வழக்கில் ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது, லாலு உட்பட 15 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அவர்களது தண்டனை விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. இதையடுத்து, லாலு உட்பட 15 பேரும் ராஞ்சியிலுள்ள பிர்ஸா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் ஜனவரி 3ஆம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என்று ஏற்கனவே நீதிபதி சிவபால் சிங் தெரிவித்திருந்தார். இதன்படி, இன்று குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, பீகார் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

புதன் 3 ஜன 2018