மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

‘மாடர்ன் ஆடி வெள்ளி’ தயாராகிறது!

‘மாடர்ன் ஆடி வெள்ளி’ தயாராகிறது!

இயக்குநர் ராம நாராயணன் இயக்கத்தில் உருவான அத்தனை திரைப்படங்களையும் இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பினாலும், அங்குமிங்கும் செல்லாமல் உட்கார்ந்து பார்ப்பதற்கு ரசிகர்கள் இருக்கின்றனர். விலங்குகள் மற்றும் தெய்வங்களை அடிப்படையாகக் கொண்ட பல திரைப்படங்களைக் கொடுத்தவர் ராம நாராயணன். அப்படி இயக்கியவற்றில் ஒன்றான ‘ஆடி வெள்ளி’ திரைப்படத்தை தற்போதைய தொழில்நுட்பத்தில் பார்க்க எத்தனை ரசிகர்கள் தயார் என்ற கேள்வியைக் கேட்டிருக்கிறது, அவரது தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேனான்டாள் பிலிம்ஸ்.

தற்போதைய ஹாலிவுட் உலகின் மிகப்பெரிய கலாசாரம் அறிவியலையும், இயற்கையையும், தெய்வ சக்தியையும் ஒன்றோடொன்று மோதவிடுவது. இதைத்தாண்டி இப்போது வரையிலும் ஹாலிவுட் யோசிக்கவில்லை. இவற்றின் அடுத்தடுத்த வெர்ஷன்களை மட்டுமே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இன்றிலிருந்து சுமார் 28 ஆண்டுகளுக்கு முன்பே அறிவியலையும், தெய்வ சக்தியையும் திரைப்படத்தில் மோதவிட்டவர் ராம நாராயணன்.

சீதாவுக்கு ஒரு யானையும், பாம்பும் ஆதரவாக இருக்க தெய்வத்தின் பார்வை பக்கபலமாக இருக்க, கோயில் சொத்தைக் கொள்ளையடிக்கத் திட்டமிடும் நிழல்கள் ரவி மற்றும் அவர் நண்பன் ஜே.ஜே ஆகியோரது திட்டங்களை எப்படி முறியடிக்கிறார்கள் என்பதுதான் ஆடி வெள்ளி படத்தின் கதை. அதன் க்ளைமாக்ஸில், ஒருபடி மேலே சென்று கிங் கட்டாரி என்ற பெரிய மிருகத்தை கம்ப்யூட்டர் உதவியுடன் கொண்டுவந்திருப்பார்கள். கிட்டத்தட்ட ஹாலிவுட்டின் காட்சில்லா (Godzilla)வுக்கு இணையான அந்த மிருகத்தை அழிக்க, சீதா வளர்க்கும் பாம்பைப் பிரமாண்ட அனகொண்டாவாக மாற்றியிருப்பார்கள்.

மேலே குறிப்பிடப்பட்டிருப்பவை எல்லாம் ஹாலிவுட்டின் மிகப்பெரிய படங்கள். தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியால் வெற்றிபெற்றிருப்பவை. ஆனால், எந்த பெரிய தொழில்நுட்பமும் இல்லாதபோதே செட் அமைப்பதன் மூலமே பிரமாண்ட விலங்குகளை திரையில் கொண்டுவந்தவர் ராம நாராயணன். இப்போது அவர் இருந்தால் ‘அம்மன்’ தொடர்பாக எப்படியெல்லாம் படம் எடுத்திருப்பார் என்று யோசிக்காத அவரது ரசிகர்கள் இருக்க முடியாது. ஆனால், அந்த குறையைத் தீர்ப்பதற்காக ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் 2018ஆம் ஆண்டில், ராம நாராயணனின் பிளாக்பஸ்டரான ஆடி வெள்ளி திரைப்படத்தை புதிய வடிவில் எப்படிப் பார்க்க விருப்பப்படுகிறீர்கள்? என்ற கேள்வியைக் கேட்டு, அதன் தொடர்ச்சி அல்லது ரீமேக் என்ற இரண்டு விருப்பங்களைக் கொடுத்திருக்கிறது. இன்று (03.01.18) காலை 12.01 மணி நிலவரப்படி ஐயாயிரத்து இருநூறு வாக்குகளை இந்தக் கேள்வி பெற்றிருந்தது. அதில் 51 சதவிகிதம் மக்கள் அதே படத்தை ரீமேக் செய்யுங்கள் என்றும், 49 சதவிகித மக்கள் அதன் தொடர்ச்சியை உருவாக்குங்கள் என்றும் விருப்பம் தெரிவித்திருக்கின்றனர்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

புதன் 3 ஜன 2018