மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

அனைவருக்கும் மின்சாரம் சாத்தியமாகுமா?

அனைவருக்கும் மின்சாரம் சாத்தியமாகுமா?

நாடு முழுவதும் கிராமங்கள் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்காக செப்டம்பர் மாதம் மத்திய அரசால் ரூ.16,320 கோடி செலவில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தான் ‘சௌபாக்யா’ திட்டம். இத்திட்டத்தின்படி 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதிக்குள் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள கிராமப்புற வீடுகளுக்கு மின் வசதி வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

கிராமப்புறப் பகுதிகளில் வாழும் ஏழை மக்களின் நிலையற்ற வருமானம் மற்றும் குறிப்பிட்ட காலத்தில் பணம் செலுத்தும் சிரமத்தை மனதில் கொண்டு அரசு மேலும் பல ப்ரீபெய்டு மீட்டர்களைப் பொருத்தவுள்ளது. இதன்மூலம் மொபைல்போன்களைப் போல ரூ.50க்கு ரீசார்ஜ் செய்து மின்சாரத்தைத் தடையில்லாமல் பெறலாம். இத்திட்டம் வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ள மக்களுக்குப் பயனுள்ளதாக அமையும். மேலும் இணையம் மூலம் இணைப்பு, சேவை, பணம் செலுத்துதல் போன்றவை வரவேற்கப்படும் என புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார். சூரிய சக்தி மூலமாக எல்.இ.டி பல்புகள் மற்றும் மின்விசிறிகள் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. சமூகப் பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பு 2011இன் அடிப்படையில் இத்திட்டத்தின் மூலம் குடும்பங்களுக்கு மின் வசதி வழங்கப்படுகிறது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 3 ஜன 2018