மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் - 24

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் - 24

ஆறு மனமே ஆறு!

“வழக்கறிஞர்கள் என்ற சமுதாயம் ஒரு போராளிச் சமுதாயம். நம் நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாற்றை எடுத்துப் பார்த்தோமானால் அதில் வழக்கறிஞர்களே முன்னால் நிற்கிறார்கள். வெள்ளையர் அரசின் சட்டங்களை அஹிம்சையாக எதிர்த்து நம் நாட்டின் தேசத் தந்தையாக விளங்கும் மகாத்மா காந்தியும் வழக்கறிஞர்தான். எத்தனையோ வழக்கறிஞர்கள் போராட்டக் களத்தின் முன்னத்தி ஏராய் விளங்கியிருக்கிறார்கள்.

உலகச் சரித்திரத்தை எடுத்துப் பார்த்தால்கூட பல நாடுகளின் சுதந்திரப் போராட்டத்தில் வழக்கறிஞர்களே முன்னால் நின்றிருக்கிறார்கள். விடுதலை அடைந்த இந்தியாவிலும் சமுதாயப் பணிக்கும், சமூகப் பணிக்கும் வழக்கறிஞர்களின் பங்கு மகத்தானது. தமிழ் மொழிக்கான முன்னுரிமை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தமிழ்நாட்டில் போராட்டங்களை முன்னெடுப்பது வழக்கறிஞர்கள்தான்.

இப்படி சுதந்திர, சமூக, சமுதாயப் போராட்டங்கள் எல்லாம் வழக்கறிஞர்களுக்கு நற்பெயர் வாங்கிக் கொடுப்பவை. ஆனால், நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம்தான் வழக்கறிஞர்களின் நற்பெயரைக் குலைப்பவையாக இருக்கின்றன. அதனால்தான் நீதிமன்றப் புறக்கணிப்புக்கு நான் எதிரியாக இருக்கிறேன்.

சமூகப் பிரச்னைகள், நாட்டுப் பிரச்னைகளுக்காக வழக்கறிஞர்கள் போராடுவது வேறு விஷயம். ஆனால், வழக்கறிஞர்கள் தங்களது பிரச்னைகளுக்காக நீதிமன்றத்தைப் புறக்கணிப்பதைத்தான் நான் எதிர்க்கிறேன்” என்ற மூத்த வழக்கறிஞர் முன்னாள் பார் கவுன்சில் தலைவர் ஆர்.கே.சந்திரமோகனிடம் அந்தக் கேள்வியை முன்வைத்தோம்.

.

வழக்கறிஞர்களுக்கு தங்கள் பிரச்னைகளைத் தீர்க்க ஆறு வழிகள் இருக்கின்றன என்று சொன்னீர்களே?

“ஆம். வழக்கறிஞர்களின் பிரச்னைகளை உரிய வகையில் தீர்த்து வைப்பதற்கு மாவட்ட நீதிபதி இருக்கிறார். போர்ட்போலியோ நீதிபதி இருக்கிறார். தலைமை நீதிபதி இருக்கிறார். பார் கவுன்சில் இருக்கிறது. பெடரேஷன் இருக்கிறது. இதையும் தாண்டி சட்ட ரீதியில் வழக்குத் தொடரலாம். இந்த ஆறு வழிகள் இருக்கும்போது இவை எதிலுமே நமக்கு நீதி கிடைக்கவில்லை என்றால்தான் சாலைக்குச் செல்ல வேண்டும். ஆனால், இவற்றில் ஏதாவது ஒன்றில் நிச்சயமாக நமக்கு நீதி கிடைக்கும்.

ஆனால், இந்த ஆறு வாய்ப்புகளையும் ஆறு வழிகளையும் மறுதலித்துவிட்டு, நீதிமன்றப் புறக்கணிப்பு, சாலை மறியல் என்று இறங்கினால் சட்டம் படிக்காதவர்களுக்கும் சட்டம் படித்தவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

வழக்கறிஞர் என்பவர் யார்? எந்த ஒரு விஷயத்தையும் சட்ட ரீதியாக அணுகுவதற்குப் பொதுமக்களுக்குச் சொல்லிக் கொடுப்பவர் மட்டுமல்ல... அப்பிரச்னை தனக்கு வரும்போதும் அதைச் சட்ட ரீதியாகவே அணுக வேண்டும். அடுத்தவர்களுக்குச் சட்ட ரீதியாக உதவி செய்து கொடுத்துவிட்டுத் தனக்கு என்று வரும்போது சட்டத்தைத் தாண்டிப் போனால் அதை எவ்வாறு ஆதரிக்க முடியும்? இதுதான் எனது கவலை.

ஒருவேளை வழக்கறிஞரை போலீஸார் கடுமையாகத் தாக்கிவிட்டார்கள், கை காலை உடைத்துவிட்டார்கள், சுட்டுக் கொன்றுவிட்டார்கள் என்றால் வழக்கறிஞர்கள் அப்போது உணர்ச்சி வசப்படுவதைத் தவிர்க்க இயலாது. அதனால் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யலாம். அதையும் சம்பந்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சங்கம் மட்டுமே செய்யலாம். அதன் பிறகு மேற்கண்ட அந்த ஆறு வழியில் ஏதேனும் ஒன்றின் வழியாக நீதியைப் பெறுவதுதான் வழக்கறிஞர்களுக்கு அழகு.”

இந்த ஆறு வழிகளில் ஒன்றின் மூலம் வழக்கறிஞர் - போலீஸ் பிரச்னையைத் தீர்க்க முடியும் என்று நம்புகிறீர்களா?

“ஏன் முடியாது? நாங்கள் தீர்த்துக் காட்டியிருக்கிறோம். குற்றாலத்திலும், மேட்டூரிலும் வழக்கறிஞர் நண்பர்கள் காவல் துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். அதற்காக வழக்கறிஞர்கள் போராட வேண்டும் என்று கொந்தளித்தார்கள். அவர்களை தனிப்பட்ட முறையில் ‘போராட வேண்டாம், பார் கவுன்சிலை நம்புங்கள்’ என்று அவர்களை அமைதிப்படுத்தினோம்.

சம்பந்தப்பட இன்ஸ்பெக்டருக்கு எதிராக வழக்கு தொடுத்தோம். அந்த வழக்கில் அந்த இன்ஸ்பெக்டர் தாக்கப்பட்ட வழக்கறிஞருக்குத் தனது சம்பளத்திலிருந்து ஐந்து லட்ச ரூபாய் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை முன்னுதாரணமாக நான் சுட்டிக்காட்ட விழைகிறேன்.

நான் பார் கவுன்சில் தலைவராக இருந்தபோது இப்படிப்பட்ட அணுகுமுறையை மேற்கொண்டு முன்னுதாரணத் தீர்ப்பை பெற்றதன் மூலம் எனது கடமையை முழுதாக நிறைவேற்றிய மாபெரும் திருப்தி எனக்கு இருக்கிறது.

காவல் துறை - வழக்கறிஞர் மோதல் நிகழவே கூடாது என்பது என் விருப்பம். ஆனால், அந்தப் பொறுப்பு வழக்கறிஞர்களுக்கு மாத்திரமல்ல; காவல் துறையினருக்கும் உண்டு. ஆனால், காவல் துறையினர் பொறுப்பின்றி செயல்படும்போதும் வழக்கறிஞர்கள் சட்டத்தை மீறாமல் சட்டத்தின்படியே நியாயம் நீதியை பெற முடியும் என்பதையே நான் என் செய்தியாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் நிறைவு செய்தார் ஆர்.கே.சந்திரமோகன்.

(விளக்கு ஒளிரும்)

இருட்டறையில் ஒரு விளக்கு!-1

இருட்டறையில் ஒரு விளக்கு!-2

இருட்டறையில் ஒரு விளக்கு!-3

இருட்டறையில் ஒரு விளக்கு!-4

இருட்டறையில் ஒரு விளக்கு!-5

இருட்டறையில் ஒரு விளக்கு!-6

இருட்டறையில் ஒரு விளக்கு!-7

இருட்டறையில் ஒரு விளக்கு!-8

இருட்டறையில் ஒரு விளக்கு!-9

இருட்டறையில் ஒரு விளக்கு!-10

இருட்டறையில் ஒரு விளக்கு!-11

இருட்டறையில் ஒரு விளக்கு!-12

இருட்டறையில் ஒரு விளக்கு!-13

இருட்டறையில் ஒரு விளக்கு!-14

இருட்டறையில் ஒரு விளக்கு!-15

இருட்டறையில் ஒரு விளக்கு!-16

இருட்டறையில் ஒரு விளக்கு!-17

இருட்டறையில் ஒரு விளக்கு!-18

இருட்டறையில் ஒரு விளக்கு!-19

இருட்டறையில் ஒரு விளக்கு!-20

இருட்டறையில் ஒரு விளக்கு!-21

இருட்டறையில் ஒரு விளக்கு!-22

இருட்டறையில் ஒரு விளக்கு!-23

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

புதன் 3 ஜன 2018