மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

ரஜினி வழியில், ராகவா லாரன்ஸ் அரசியலில்...

ரஜினி வழியில், ராகவா லாரன்ஸ் அரசியலில்...

கடந்த வருடத்தின் இறுதியில் நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் வரவை அறிவித்ததுபோலவே, தற்போது நடிகர் ராகவா லாரன்ஸும் தனது அரசியல் என்ட்ரி குறித்து முடிவெடுத்திருக்கிறார். ‘ரஜினியின் காவலன்’ என்று பெருமையாக இந்தத் தகவலை ராகவா லாரன்ஸின் சார்பில் வெளியிட்டிருக்கிறார்கள்.

ரஜினியின் அதிதீவிரமான எத்தனையோ ரசிகர்களை இந்த உலகம் கண்டிருக்கிறது. அவர்களில் ஒருவரான ராகவா லாரன்ஸ் ஒருபடி மேலே சென்று வெளிப்படையாகவே தனது நடிப்பு முதல் தொழில் வரை ரஜினியின் அம்சங்களை கடைப்பிடித்துக்கொண்டிருப்பவர். ஏன் ரஜினியின் மீது கொண்ட அன்பின்பால், அவரது ஆன்மிக பயணம்கூட ரஜினி சென்ற பாதையிலேயே இருந்தது. அந்தளவுக்கு ரஜினியின்மீது பற்றுகொண்ட ராகவா லாரன்ஸ் தனது அரசியல் என்ட்ரி குறித்த முடிவை வருகிற 4ஆம் தேதி (நாளை) பத்திரிகையாளர்களைச் சந்தித்து வெளியிடுகிறார்.

நடிப்பு, நடனம், பேய் திரைப்படங்கள் ஆகியவற்றைத் தாண்டி ராகவா லாரன்ஸ் அவரது சமூக அக்கறைக்காக அதிகம் அறியப்பட்டவர் என்கிற விதத்தில் அவருக்கென தனிப்படையே இருக்கிறது. அனைவரும் ராகவா லாரன்ஸ் செய்த உதவி மற்றும் அவர்கள் முன்னெடுத்த முயற்சியின்பால் வாழ்க்கையில் வெற்றி கண்டவர்கள். இவர்களது ஆதரவு தமிழ்நாடு முழுவதிலுமிருந்தும் ராகவா லாரன்ஸுக்கு இருக்கிறது. இந்த ஆதரவை ஓட்டுகளாக மாற்ற ராகவா லாரன்ஸ் முயற்சிக்கிறார் என்ற அரசியல் குறித்த விமர்சனம், அவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டபோதே முன்வைக்கப்பட்டது. ஆனால், ஆதரவு கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

இந்தளவுக்கு ராகவா லாரன்ஸின் மீது அரசியல் பார்வைகள் இருக்கும் நிலையில், ரஜினி தனது படைக்குப் போர் வீரர்களைக் கேட்டதற்காக, என் தலைவனுக்கு நானே காவலன் என்று கிளம்பியிருக்கிறார் ராகவா லாரன்ஸ். என்ன சொல்லப் போகிறார் என்று பார்ப்பதற்கு நாளை வரை காத்திருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

புதன் 3 ஜன 2018